ஆவிக்குரிய நினைவிழப்பு Birmingham, Alabama, USA 64-0411 1இப்பொழுது நம்புகிறேன், இப்பொழுது நம்புகிறேன் யாவும் கைக்கூடிடும், இப்பொழுது நம்புகிறேன் இப்பொழுது நம்புகிறேன், இப்பொழுது நம்புகிறேன் யாவும் கைக்கூடிடும், இப்பொழுது நம்புகிறேன் தேவனுடைய வார்த்தைக்காக நாம் சிறிது நேரம் நிற்போம். நாம் ஆமோஸ், தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் 3-வது அதிகாரத்திற்கு திருப்பி, முதலாம் வசனம் துவங்கி பார்ப்போம். சகோதரி ஜீயரிட்டா, ஆன்னா ஜீன், சகோதரி மூர் அவர்களுக்கு அந்த அருமையான பல்லவிக்காக நான் நன்றி செலுத்த விரும்புகிறேன். நான் அங்கு அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கையில் எனக்கு பழைய நினைவுகளைக் கொண்டு வந்தது. இவர்கள் பாடுகையில், இவர்கள் நம்மோடிருந்து நமது கூட்டங்களில் பாடினதையும், இவர்கள் 16 வயதுள்ள சிறு பெண்கள் என்று நானும் சகோ. ஜாக்கும் பேசிக் கொண்டிருந்ததையும் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது, சகோதரி அன்னா ஜீன்னுக்கு ஐந்து பிள்ளைகளும், சகோதரி ஜீயனிட்டா இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகவும் இருக்கிறார்களென்று நான் நினைக்கின்றேன். ஆகவே நாம் அந்த சூரிய அஸ்தமனத்திற்கு அருகில் உள்ளோம், பெண்களே, அப்போது இருந்தது முதல், சுமார் 16 வருடங்கள் வித்தியாசம் உள்ளன. இன்னும் நீடிக்காது, அந்த மகிமையான நேரத்திற்கு நாம் கடந்து செல்வோம். 2இப்பொழுது ஆமோஸ் 3-வது அதிகாரத்தை படிப்போம். இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக் குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள். பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்து கொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களை தண்டிப்பேன். இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ? தனக்கு இரை அகப்படாமலிருக்க காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரை பிடியாமல் இருக்கும்போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ? குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ ? ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார். யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? ஆமோஸ்: 3:1-8 நாம் தமது தலைகளை வணங்குவோம். 3கர்த்தராகிய இயேசுவே, ஆண்டவரே, உம்முடைய வார்த்தையில் இந்த பாகத்தில் நாங்கள் இன்றிரவு ஐக்கியங் கொள்ளட்டும். ஆண்டவரே, நீர் தாமே இங்கிருந்து நாங்கள் எடுக்கும் இப்பாகத்திற்கான பொருளை தரவேண்டுமாய், நாங்கள் ஜெபிக்கிறோம். இது தாமே உமக்கு மகிமையை கொண்டு வரட்டும். உம்முடைய வார்த்தையின் பேரில் நாங்கள் இன்றிரவு காத்திருக்கையில் எங்களை ஆசீர்வதியும், வியாதியஸ்தரையும், இன்னலுற்றோரையும் சுகப்படுத்தும். இழந்து போனவரை இரட்சியும். சரீரபூர்வமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் பெலவீனமுறும் பெலவீனப் பாண்டங்களுக்கு பெலத்தை அருளும். உமது பிரசன்னத்தை அபரிமிதமாய் எங்களுக்கு ஊற்றும். இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். இப்பாகத்திலிருந்து ஆவிக்குரிய நினைவிழப்பு என்னும் பொருளை இன்றிரவு நான் எடுக்க வாஞ்சிக்கிறேன். 4நாளை வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம் என்பதை மறவாதீர்கள். நாளை மதியம் 2 மணிக்கு நாம் ஆராதனையை துவக்கும் போது, தேவன் தாமே அளவில்லாத மகத்தான காரியங்களை நடப்பிப்பார் என்று நாம் எதிர்பார்க்கிறோம். பையன் இங்கு ஜெப அட்டையை விநியோகித்துக் கொண்டிருப்பான். ஜெபம் செய்யப்பட விரும்புபவர் எல்லோருக்கும் ஜெபம் ஏறெடுக்கப்படும். நாளை தேவனுக்குள் மகத்தான ஒரு நேரத்தை நாம் எதிர்பார்க்கிறோம். வெளியிடத்திலிருந்து வந்து இங்குள்ளவர்களே, நினைவில் கொள்ளுங்கள். முழு சுவிசேஷ, அருமையான சபைகள் இந்நகரம் முழுவதும் உள்ளன. எல்லாவற்றிலும் நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். இப்பொழுதுதான் வெளியில் இருந்து உள்ளே வந்திருக்கும் என்னுடைய உதவிப் போதகர்களில் ஒருவராகிய சகோ. ஜாக்சனிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் முன்னாள் மெத்தோடிஸ்ட் சபையைச் சேர்ந்தவர். நம்மிடத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு நகரத் தூரம் தள்ளியிருக்கிறார். இக்கூடாரத்துடன் ஐக்கியப்பட்டிருக்கும் எத்தனைப் பேர் இங்குள்ளனர். உங்கள் கரங்களை நான் காணட்டும், எல்லாவிடங்களிலும். என்னே, நிச்சயமாக உங்களை இங்கு வைத்திருப்பதில் நான் மகிழ்ச்சியுறுகிறேன். இந்தியானாவில் நான் சிறிது காலமாய் வரும்போது இருப்பதைக் காட்டிலும் இது ஒரு நெருங்கிய சந்திப்பாய் அமைந்துள்ளது. நான் மறுபடியும் இங்கு சீக்கிரமாய் வந்து ஒரு கூடாரத்தை அமைத்து கர்த்தருக்குச் சித்தமானால் அந்த ஏழு எக்காளங்களைக் குறித்து பார்க்கலாம் என்றிருக்கிறேன். ஆகையால் இப்பொழுது, நாளை மறக்காதீர்கள். நாளை இரண்டு மணிக்கு பிறகு நமது அடுத்த ஆராதனை டாம்ப்பா, பிளாரிடாவில் அடுத்த வாரம் துவங்கும். 5ஆவிக்குரிய நினைவிழப்பு என்பதன் பேரில் நான் பேச விரும்புகிறேன். இப்பொழுது பேசப்போகும் இந்த பொருளுக்குச் செல்லும் முன்பு இதற்கு அடித்தளமாக ஒரு க்ஷணம் இந்த சிறிய மனிதனாகிய ஆமோஸைக் குறித்துப் பேசுவோம். இது சமாரியாவிலே மிகவும் செழிப்பு இருந்த சமயத்தில் நிகழ்ந்த ஒன்று. இஸ்ரவேல் செழிப்படைந்திருந்தாள். அவர்கள் உண்மையாகவே உலகத்தின் பின் சென்று செழிப்படைந்தார்கள். சில சமயங்களில் செழுமையடைவது ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கான அடையாளம் அல்ல, ஆனால் அது சில சமயங்களில் முரண்பாடாயிருக்கும். நீ நிறைய உலகப் பொருட்களை உடையவனாயிருப்பதால் தேவன் உன்னை ஆசீர்வதிப்பதை காண்பிக்கிறது என்று மக்கள் ஒருவேளை நினைக்கலாம். அது உண்மையல்ல. சில சமயங்களில் அது வேறு வழியாக இருக்கலாம். 6ஆனால் இச்சிறிய மனிதனைக் குறித்து நமக்கு அவ்வளவாய்த் தெரியாது. அவன் எங்கிருந்து வந்தான் என்பதற்கான வரலாறு கூட நம்மிடம் கிடையாது. இங்கு வேத வசனத்தின்படி அவன் ஒரு மந்தையை மேய்ப்பவன் என்று நாம் அறிவோம். ஆனால் தேவன் அவனை எழுப்பிருந்தார். அக்காலத்திலே உலகத்திலிருந்த, சுற்றுலாத் துறையிலே பிரசித்தி பெற்ற பட்டினங்களில் ஒன்றாகிய சமாரியாவிலே ஒரு உஷ்ணமான நாளை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். மியாமி, அல்லது ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற மகத்தான நகரங்களில் ஒன்றாயிருந்த நகரங்களைப் போன்று அது அமைக்கப்பட்டிருந்தது. நாம் சிறிது அவனைக் குறித்து கற்பனை செய்து பார்ப்போம். அவன் அப்பேற்ப்பட்ட ஒரு நகரத்தில் இருந்ததேயில்லை. ஆனால், அவன் தேவனுடைய வார்த்தையை உடையவனாய் இருந்து, எப்பக்கத்திலும் பாவமானது குவிக்கப்பட்டிருந்த அந்த மகத்தான நகரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். ஊழியக்காரர்களெல்லாம் தேவனுடைய வார்த்தையை விட்டு முழுவதுமாக அகன்று சென்று விட்டிருந்தனர். நீண்ட வருஷங்களாக அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசி இருக்கவில்லை. 7ஆகையால் இந்த சிறிய மனிதன் சமாரியாவின் வடக்குப் புறமாக இருந்த மலையின் உச்சியில் ஏறினான். அவன் அந்தப் பட்டினத்தை கீழ் நோக்கிப் பார்க்கையில் உஷ்ணமான சூரியன் பிரகாசித்துக் கொண்டிருப்பதையும், அவனுடைய நரைத்த தாடி முகத்தின் மேல் விழுகிறதையும், அவனுடைய சிறிய கண்கள் குறுகுகிறதையும், அவனுடைய சிறிய வழுக்கைத் தலையானது பிரகாசிப்பதையும் என்னால் கற்பனைச் செய்து பார்க்கமுடிகிறது. சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக ஒரு பட்டினத்திற்குச் சென்று அதன் எல்லா வசீகரத்தையும் அழகையும் பார்ப்பதைப் போல அவன் அதைப் பார்க்கவில்லை. ஒரு காலத்தில் தேவனுடைய பட்டினமாய் இருந்த அது, ஒழுக்கச் சீர்கேட்டை அடைந்ததை அவன் பார்த்து கவனித்தான். எப்படி இருந்தாலும்... 8யாரும் அறியாத இந்த சிறிய மனிதன் தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் ஆவான். அவனைக் குறித்து நமக்கு அவ்வளவாக தெரியாது. அவன் எங்கிருந்து வந்தான் என்று நாம் அறியோம். தீர்க்கதரிசிகள் எப்போதும் யாரும் அறியாதவாறு காட்சியில் தோன்றி அப்படியே கடந்து செல்வார்கள். அவர்கள் எங்கிருந்து வருகின்றனர், எங்கு செல்கின்றனர் என்றும், அவர்களுடைய முன்காலமும் நமக்கு தெரியாது. தேவன் அவர்களை எழுப்புகிறார். அவனிடம் காண்பதற்கு ஒன்றும் கிடையாது. ஆனால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாய் இருந்தான். நான் இதைத்தான் முக்கியமான ஒன்றாய் காண்கிறேன். அவன் தன் ஊழியத்தைத் துவக்குவதற்காகவே சமாரியாவிற்கு வந்தான். யாரிடமிருந்தும் அவன் ஒத்துழைப்பைப் பெற்றிருக்கமாட்டான் என்று நான் நிச்சயிக்கிறேன். எந்த ஸ்தாபனத்திலிருந்தும் அவன் ஐக்கியச் சீட்டை பெற்றிருக்கமாட்டான். எந்த குழுவிலிருந்து அவன் வந்துள்ளான் என்பதை காண்பிக்க அவனிடம் அறிமுகச் சான்று கடிதங்கள் இல்லை (Credentials). ஆனால், அந்த பட்டினத்திற்கான தேவனுடைய வார்த்தையாகிய ஒன்றை மாத்திரம் அவன் உடையவனாயிருந்தான். இப்போது நாம் ஆமோஸை நம்முடைய நேரத்திற்கு கொண்டு வருவோமானால், இன்றைக்கு நம்முடைய பட்டினத்தில் அவன் வரவேற்கப்படுவானா என்று நான் ஆச்சரியப்படுகிறேன். நாம் அவனை வரவேற்போமா அல்லது அவர்கள் செய்தது போல நாம் செய்வோமா என்று நான் ஆச்சரியமுறுகிறேன். நம்முடைய பட்டினங்களும் அதேபோன்ற சீர்குலைவில்தான் உள்ளன என்று நாம் காண்கிறோம். அப்போது இருந்தவாறே பாவமும் மக்களிடையே பிரதானமாக இருப்பதை நாம் காணலாம். இந்தச் சிறிய, யாரும் அறியாத மனிதன் எப்படி இந்த கூட்டங்களை நடத்தப்போகிறான்? எப்படி, எங்கு அவன் ஆரம்பிக்கப் போகிறான்? எந்த சபைக்கு அவன் செல்லப் போகிறான்? யார் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப் போவது? என்று நான் ஆச்சரியமுறுகிறேன். எங்கிருந்து வந்தவன் என்பதை காண்பிக்க அவனிடம் ஒன்றுமில்லை, அவனிடம் ஒன்றுமே கிடையாது. ஆனால் அந்த பட்டினத்திற்கான கர்த்தர் உரைக்கிறதாவது அவனிடம் இருந்தது. 9மிகவும் சீர்குலைந்த நிலையில், ஒழுக்கக் கேட்டில் அவர்களை அவன் கண்டான். அது ஒரு மகத்தான நேரமாயிருந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இருப்பது போல அப்பட்டினத்திலுள்ள பெண்கள் ஆகத் துவங்கினர். அவர்கள் சீரழிந்த நிலையில் இருந்தனர். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று தேவன் எதிர்பார்த்ததற்கு மாறாக அவர்கள் வேறு வழியில் சென்றனர். ஆகவே அது ஒரு மகத்தான இடமாய் தெருக்களில் நடனங்களும், ஸ்திரீகள் உடைகளைக் களைவதும், ஆடை அவிழ்ப்பு (strip tease) போன்ற நிகழ்ச்சிகளும், இப்படி பல இருந்ததை நாம் காணலாம். அந்த நாட்களில் அது ஒரு பொது களியாட்ட நிகழ்ச்சியாக இருந்தது. இப்பொழுதோ அது ஒவ்வொரு நாளும் உள்ளது. சீதோஷ்ண நிலை சற்று வெப்பமானால், நீ எந்த ஒரு காட்சிக்கும் செல்லத் தேவையில்லை. எல்லாம் எங்கும், எப்படியும் உள்ளன. இவ்விதமாய் செய்யும் பெண்களே, உங்களுக்கு வெட்கமில்லையா! உன்னைக் குறித்து வெட்கமடைவது கிடையாதா? 10பிறகு சிறிது காலத்திற்கு முன்பாக இங்குள்ள ஒரு பெண்ணிடம் கூறினேன். அதற்கு அவள் என் “சகோ. பிரான்ஹாமே மற்ற பெண்களைப் போலத்தானே'' என்று கூறினாள். நான் ஆனால் மற்றவர்களைப் போல நடக்க நாம் இல்லை. நாம் வித்தியாசப்பட்டவர்கள். “நாம் வித்தியாசமான குணாதிசயம் கொண்டவர்கள்'' என்றேன். ஒரு பெண் இப்படி கூறினது என் நினைவில் வருகிறது. ''நல்லது. சகோ. பிரான்ஹாம், நான் அந்த குட்டை கால் சட்டை (shorts) அணிவதில்லை, நான் தளர் காற்சட்டை (slacks) அணிகிறேன்'' என்று கூறினாள். ''அது மோசமானது, ஆண்களுக்கான ஆடைகளை பெண்கள் அணிவது'' ''அஹ் அது அவருடைய பார்வையில் அருவருப்பானது'' என்று நான் சொன்னேன். அது முற்றிலும் சரி. ஒருவர் கூறினார் “நல்லது, மற்ற ஆடைகளை அவர்கள் தயாரிப்பதில்லையே'' ”இன்னும் தையல் இயந்திரங்களையும், மற்றவைகளையும் செய்கிறார்களே'' இதற்கு சாக்குபோக்கு கிடையாது. இருதயத்தில் இருப்பதைத்தான் அது வெளியில் காண்பிக்கிறது. அது தன்னைத்தானே அடையாளங் காண்பிக்கிறது. 11இந்த பட்டினமானது ஒழுக்கச் சீர்கேடு அடைந்தது என்று நாம் காணலாம். பிரசங்கிகளும் அதைக் குறித்து கூற பயந்தார்கள். ஆனால், அவர்களோ “கர்த்தர் உரைக்கிறதாவது”, ''இந்த காரியத்தை அப்புறப்படுத்துங்கள், இல்லையேல் நீங்கள் சிறைப்பட்டு போவீர்கள்'' என்று அவர்களிடம் கூற வருகின்ற, ஒரு சிறிய, வயதான, மலையின் மேல் ஏறி வருகின்ற ஒரு மனிதனை உடையவர்களாய் இருந்தனர். பிறகு அவன், அவனுடைய தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலின் நாள் மட்டும் உயிரோடிருந்து அதைக் கண்டான். மற்ற நாடுகளை ஆதரித்து புறம்பே தள்ளப்பட்ட இரண்டாம் யெரோபெயாமின் நாட்களில் அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். இந்த சிறிய ஆமோஸ் ''நீங்கள் ஆராதிக்கின்றதாக உரிமை பாராட்டும் அதே தேவன், உங்களை அழிப்பார்'' என்று அவர்களிடம் தீர்க்கதரிசனமாய் உரைத்தான். அதை அவர் செய்தார். அவருடைய சத்தமானது பர்மிங்காமில் இன்றிரவு இருக்குமானால், “நீங்கள் சேவிப்பதாக உரிமை கோரும் அதே தேவன் உங்களை ஒரு நாளில் அழிப்பார்'' என்று அதே காரியத்தை சபைகளுக்கு கூறும். நான் இங்குள்ள இக்கூட்டத்தாரிடத்தில் பேசவில்லை. இந்த ஒலி நாடாக்கள் உலகம் முழுவதும் செல்கின்றன, இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், அது உண்மை. 12அவன் பட்டினத்திற்குள் பிரவேசித்த போது இந்த காரியங்களைக் கண்டான். தேவனுடைய பிள்ளைகளுக்காக அனுப்பப்பட்ட இவன், இவர்களின் சீர்கேட்டை கண்டபோது எப்படி உணர்ந்திருப்பான் என்று நான் ஆச்சரியமுறுகிறேன். அவன் வரும்போது நாம் அவனை வரவேற்போமா? அவனுக்கு ஒத்துழைப்பு அளிப்போமா? நம்மால் இயன்ற எல்லாவற்றையும் அவனுக்களிப்போமா? நம்முடைய கவனத்தை அவனிடம் செலுத்துவோமா? நாம் மனந்திரும்பி தேவனுடைய வார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்றும், தேவன் என்ன செய்யச் சொல்கிறாரோ அதன்படி செய்ய வேண்டும் என்று அவன் கூறும்போது நாம் அதை செய்வோமா? என்று நான் வியக்கிறேன். நம் சகோதரிகள் தங்களுடைய கத்தரிக்கப்பட்ட மயிரைக் குறித்து என்ன செய்வார்கள் என்று நான் ஆச்சரியமுறுகிறேன்? ஆமோஸ் வருவானானால் தங்களுடைய மயிரை வளர விடுவார்களா? அவன் அதைப் பிரசங்கித்திருப்பான் என்று நான் சொல்கிறேன். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாகும். 13மூன்று அல்லது நான்கு முறை திருமணம் செய்து மூப்பர்களாக இருக்கமுயலும் மூப்பர்களை நம்முடைய குழுமம் (Boards) நீக்குமா, என்று நான் ஆச்சரியமுறுகிறேன். ஒரு மனிதன் தன் மனைவி குட்டைக்கால் சட்டைகளை (shorts) அணிந்துகொள்ள அனுமதித்து, அவள் வெளியே தெருவில் சென்று ஒரு மனிதன் கடந்து செல்லும் போது, அவ்விடத்தையும் பேரழிவிற்குட்படுத்துவாளானால் அப்படிப்பட்ட அந்த மனிதனிடத்தில் (அப்பெண்ணின் கணவனிடத்தில் - தமிழாக்கியோன்) அவன் (ஆமோஸ் தீர்க்கதரிசி - தமிழாக்கியோன்) என்ன கூறியிருப்பான் என்று நான் வியக்கிறேன். நிச்சயமாக தன்னிடமுள்ள எல்லாவற்றைக் கொண்டு அதைத் தகர்த்தெரிந்திருப்பான். ஏனெனில் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை கொண்டிருந்தான். அதைத் தவிர மற்ற எதையும் அவனால் செய்ய இயலவில்லை. அந்நாளிலே அவர்கள் ஒரு மோசமான வியாதியைக் கொண்டவர்கள் என்று அவன் கண்டான். ஆவிக்குரிய நினைவிழப்பு. அதே காரியம்தான் இன்று நம்மிடையே உள்ளது. 14இப்பொழுது, என்ன நடக்கப் போகிறதென்பதை அவன் எப்படி அறிந்து கொண்டான்? எப்படி ஆமோஸ் தெரிந்து கொண்டான்? முதலாவது அவன் ஒரு தீர்க்கதரிசி ஆவான். பிறகு அடுத்ததாக நோயாளிகளின் உடலில் ஏற்படும் வியாதியின் அறிகுறியை கண்டு பிடித்து (diagnosis) அது என்ன வியாதி என்பதை அறிந்து அதன் முடிவுகள் என்ன என்பதை அவன் அறிந்திருப்பான். ஒரு மருத்துவர் ஒரு நோயின் உக்கிர வேகத்தை கண்டு அந்த வேகமாக தொற்றிப் பரவுகின்ற (malignent) அது ஸ்திரப்பட்ட பிறகு, மரணம் தவிர வேறெதுவும் இல்லை என்பதை அறிவார். தேவன் அதைக் குறித்து ஏதாவது செய்தாலொழிய அது அவ்வளவுதான். நல்லது, நீங்கள் ஒரு பட்டினத்தை, ஜனங்களை, சபையை, தேவனைவிட்டு மிகவும் அகன்று சென்றிருக்கும் ஜனங்களை நோக்கிப் பார்க்கும்போது அங்கு பிணியாளிகளுடைய ''பாவம்! பாவத்தின் சம்பளம் மரணம்!'' என்ற நோயின் அறிகுறியைத் தவிர வேறெதுவும் இல்லை. அது மரிக்கிறது. அவர்களின் வியாதியின் அறிகுறி என்ன என்பதை அது நிரூபிக்கிறது. கவனியுங்கள். ஜனங்கள் தேவனை விட்டு அகன்று தேவனுடைய வார்த்தையைக் கேட்காமல் வார்த்தையைக் குறித்த வாஞ்சையற்றவர்களாய்ப் போனால் அப்பொழுது அதைக் குறித்த ஒரு நோயின் அறிகுறி உள்ளது. “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகும்'' என்ற அறிகுறி. ”அவிசுவாசம் உங்களை தேவனிடத்திலிருந்து பிரிக்கும். அது சரியானதாகும். ஆகையால் பாவத்தின் வியாதி அப்பட்டினத்தில் இருப்பதை அவன் கண்டபோது அது என்ன வியாதி என்றும் அதன் பலன் என்ன என்றும் அவன் அறிந்து கொண்டான். 15இப்பொழுது, இந்த நினைவிழப்பு என்னும் வியாதியானது (Amnesia) நீ உன்னைத்தானே அடையாளம் கண்டு கொள்ளாத நிலையில் உன்னை கொண்டு செல்லும் என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. இப்பொழுது இது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். இது அடிக்கடி நிகழாது. ஒரு அதிர்ச்சியின் விளைவாகவே இது நிகழ்கிறது. யாரோ ஒருவர் தான் யார் என்பதை அறியாதிருப்பார். அது யுத்தங்களில் இருப்பதை நாம் காணலாம். சில சமயங்களில் இராணுவ வீரர்களுக்கு அது வரும். சில சமயங்களில் மக்களுக்கு அது வரும். இந்த நோய் வரக் காரணமாயிருக்கும் மற்றொரு காரியம் கவலையாகும். கவலை அதைப் பிறப்பிக்கிறது. கவலையில் நன்மைகள் ஏதும் கிடையாது. ஆம். கவலையைத் கடந்து, விசுவாசத்தை ஏற்றுக் கொள். யாரோ ஒருவர் கூறினார் ''நல்லது. நீர் காலையில் சுட்டுத் தள்ளப்படப் போகிறீர்கள் என்றால் அதைக் குறித்து நீர் கவலை கொள்வீரா?'' அதற்கு நான் ''இல்லை, அப்படி இருக்காது என்று நான் நினைக்கிறேன்'' “ஏன்'' நான் சொன்னேன் “கவலை நிலைமையை மோசமாக்குமே தவிர, வேறொன்றையும் செய்யாது'' ''நல்லது, விசுவாசம் வைத்திருத்தல் என்ன நன்மை செய்யப் போகின்றது?'' நான் சொன்னேன், “அது என்னை விடுவிக்கும்” அது சரி, பாருங்கள். 16ஆகையால் கவலை எந்த நன்மையும் உடையதாய் இல்லை, ஆனால் விசுவாசம் எல்லா நன்மைகளையும் உடையதாய் உள்ளது. விசுவாசியுங்கள்! இப்பொழுது, கவலை சில சமயங்களில் அதைப் பிறப்பிக்கும். இரண்டு கருத்துக்களுக்கு நடுவே இருப்பது இந்த நினைவிழப்பை (AMNESIA) மக்களிடையே பிறப்பிக்கும் மற்றொரு காரியமாகும். அது உன்னை, நீ என்ன செய்தாய் என்ற உன்னுடைய சிந்தையையே மறக்கச் செய்யும் நிலைக்கு உன்னை உண்மையாகவே கொண்டு செல்லும். உன்னுடைய சிந்தையை நீ மறந்திருப்பாய். நீ யார் என்பது உனக்கே தெரியாது. உன்னையே நீ அடையாளம் கண்டு கொள்ள முடியாது. நீ நடக்கலாம், உண்ணலாம், இன்னும் மற்ற காரியங்களைச் செய்யலாம். ஆனால் இன்னுமாய் உன்னைத்தானே நீ அடையாளம் கண்டு கொள்ள முடியாது. நீ மிகவும் தேர்ந்த படிப்பை உடையவனாய் இருக்கலாம். ஆனால் நீ பெற்ற அதே கல்வி எங்கிருந்து வந்தது என்பதையும், நீ யார் என்பதையும், நீ எதைச் சேர்ந்தவன் என்பதையும் உனக்குத் தெரிவிக்காது. இதுதான் நினைவிழப்பு (AMNESIA) என்று நமக்கு கூறப்பட்டுள்ளது. 17இந்த மனித ஜீவியத்தில், விவாகத்தினால் நம்முடைய குடும்பங்கள் மூலம் நாம் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறோம். நாம் விவாகம் செய்து, நம்முடைய மனைவிகள் நம் விவாக இணைப்பின் மூலம் நம் குடும்பம் அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றது. ஆனால் அதன்பின் இந்த மோசமான காரியம் உனக்கு நேர்ந்து, நீ விவாகமானவனா என்றும், யார் உன் மனைவி என்றும், உன் பிள்ளைகள், உன் தகப்பனார், உன் தாயார், உன் அயலான் யார் என்றும் உன்னால் நினைவில் கொள்ள முடியாமல் இருக்குமானால் எப்படி இருக்கும்? அது ஒரு மோசமான காரியமாக இருக்கும். நாம் நம்மை ஞானத்தின் மூலம் மனித குலத்தை மிருக இனத்திலிருந்து வேறுபடுத்தி அடையாளம் காண்பிக்க முடிகிறது. ஒரு மிருகத்தினால் சிந்திக்க முடியாது. அது சத்தங்களின் மூலமாகவே செல்லும். அதற்கு ஆத்துமா கிடையாது. ஆனால் நாமும் மிருக ஜீவன் தான். ஆனால் எது நம்மை வித்தியாசப்படுத்துகிறது?... நாம் பாலூட்டி வகையைச் சேர்ந்தவர்கள். ஒரு பாலூட்டி வெப்பமான இரத்தத்தை உடைய ஒரு மிருகம், நாமும் ஒரு மிருகத்தின் தன்மைக் கேற்றவாறு அமைக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் எது நம்மை வித்தியாசப்படுத்துகிறது? நமக்கு ஒரு ஆத்துமா, எது தவறு எது சரி என்று கூறும் ஒரு சிந்தை இருப்பதன் மூலம் நாம் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறோம். 18இந்த நினைவிழப்பு (AMNESIA) உனக்கு வருமானால் நீ நேபுகாத் நேச்சாரைப் போல ஆகலாம். அவன் ஒரு சமயம் தன்னைத் தானே உயர்த்தினான். அவன் தான் ஒரு மிருகம் என்று நினைக்கும்படி தேவன் விட்டுவிட்டார். அவன் வனாந்தரத்திலே ஜீவித்து மாட்டைப் போல புல்லைத் தின்றான். கழுகின் சிறகுகளைப் போல அவன் உடல் முழுவதும் முடி வளர்ந்தது. ஒரு மிருகத்தின் இருதயம் அவனுக்குள் இருந்தது போன்று அவன் ஆனான். பாருங்கள்? அதுதான் நினைவிழப்பு (AMNESIA). ஏனென்றால், தான் ஒரு ராஜா என்பதை அவன் மறந்து போனான். தான் ஒரு மனிதன் என்பதை அவன் மறந்தான். தன்னை ஒரு மிருகமாக நினைத்து மிருகத்தைப் போலவே நடந்து கொண்டான். ஏனெனில் தான் ஒரு மனிதன் என்பதை மறந்து போயிருந்தான். அது இன்றைக்கு சுலபமாயிருக்கிறது. கிறிஸ்தவ சபை என்ன என்பதை நாம் சில சமயங்களில் மறந்துபோகிறோம். நாம் உலகத்தாரைப் போல நடக்கின்றோம். அது நாம் ஆவிக்குரிய நினைவிழப்பை (SPIRITUAL AMNESIA) பெற்றிருப்பதை நமக்கு காண்பிக்கிறது. ஏனென்றால் நீங்கள் ஒரு கிறிஸ்தவனைப் போல நடக்காமல் உலகத்தாரைப் போல நடக்கிறீர்கள். நீங்கள் உலகத்தின் இருதயத்தை பெற்றுக் கொள்கிறீர்கள். ஆதலால் அது இதை (ஆவிக்குரிய நினைவிழப்பை - தமிழாக்கியோன்) பிறப்பிக்கிறது. 19இஸ்ரவேலானது உலகத்திற்கு திறக்கப்பட்டு இப்பள்ளத்தில் விழுந்து போனதை இங்கே நாம் காணலாம். ஆகையால் இத்தீர்க்கதரிசியானவன் அவர்களை வெளியே தோண்டி எடுத்து, முடிந்தவரை அவர்களுக்கு போதகம் செய்ய அனுப்பப்பட்டான். தேவன் தம்முடைய கிருபையால் இஸ்ரவேலை பூமியில் இருந்த மற்ற குடும்பங்களிலிருந்து தெரிந்தெடுத்தார். கிருபை அதைச் செய்தது. அவர்கள் விருப்பப்பட்ட நிலங்களை அவர்களுக்கு அளித்தார். அவர்கள் பிரயாசப்பட்டு கட்டாத வீடுகளை அவர்களுக்கு அளித்தார். தேவன் அவர்களை தெரிந்தெடுத்து அதை அவர்களுக்குச் செய்தார். அவர்கள் வாங்காத பண்ணைகளை அவர்களுக்கு கொடுத்தார். அவர்கள் பயிரிடாத ஆகாரத்தை அவர்களுக்கு அளித்தார். அவர்கள் தோண்டாத கிணறுகளை அவர்களுக்கு அளித்தார். அவர்கள் வென்றிராத வெற்றிகளை அவர்களுக்கு அளித்தார். தகுதியே இல்லாத அவர்களுக்கு தமது கிருபையால் இவைகளைச் செய்தார். அவருடைய தெரிந்து கொள்ளப்பட்ட, நேசிக்கப்பட்ட இந்த ஜனமாகிய இஸ்ரவேலுக்கு தமது கிருபையால் இவைகளைச் செய்தார். அவர் வேதத்தில் கூறியுள்ளார், ''ஒரு நிலத்தில் சிறு பெண்ணாக தன்னுடைய சொந்த ரத்தத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதாக அவளைக் கண்டார். அவர் அவளைக் கழுவி சுத்தம் செய்தார். ஆனால் தேவன் தன்னுடைய இரக்கத்தையெல்லாம் அவளுக்கு பாராட்டின பிறகு, அவள் ஐசுவரியமுள்ளவளானாள்'', “அவளுக்கு நினைவிழப்பு வியாதி வந்தது. ஆகையால் இவையெல்லாம் எங்கிருந்து வந்தன என்பதை அவள் மறந்து போனாள்.” 201964-ஆம் ஆண்டில் உள்ள அமெரிக்காவை இது படம் பிடித்து காட்டுகிறது என்று நான் நினைக்கிறேன். அதே வியாதியினால் அது பீடிக்கப்பட்டு அவதியுறுகிறது. நாம் மகத்தான வல்லமை பொருந்திய சபைகள். நாம் மகத்தான மக்கள்தாம். நாம் இலட்சக் கணக்கான தொகையை உடைய மக்கள் தாம். இருப்பினும் இது எங்கேயிருந்து வந்த ஒன்று என்பதை நாம் மறந்து போயிருக்கிறோம். ஒரு மோசமான நிகழ்வாய் அது அவர்களுக்கு இருந்தது. தேவன் அவர்களிடம் நல்லபடியாக இருந்து, எல்லா அஞ்ஞான தேசங்களிலிருந்து அவர்களைக் கொண்டுவந்து, வேறு பிரிக்கப்பட்ட ஜனங்களாக்கி, அவர்களை தமக்காக வேறுபிரித்துக் கொண்டார். ''அவர் ஒரு திராட்சை செடியை வேறொரு தேசத்திலிருந்து எடுத்து அதை வேறொரு தேசத்தில் நட்டார். அது அழகாக வளர்ந்து கனி தரும்படி செய்தார். ஆனால் அந்த திராட்சை செடி தனக்கு வந்த ஆசீர்வாதங்கள் எங்கிருந்து வந்தது என்பதை மறந்து போனது'' என்று கூறினார். அதே போன்றுதான் இந்த கடைசி நாட்களில் ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதின் சாட்சியின் அர்த்தம் என்ன என்பதை தேவ மக்கள் மறந்து போய் உள்ளனர். இந்த நினைவிழப்பானது (AMNESIA) மறுபடியுமாக மக்களின் மேல் வந்துள்ளது. அவர்கள் தங்களைத் தாங்களே அடையாளங்கண்டு கொள்ள முடியாமல் உள்ளனர். அதைக் குறித்த எல்லாவற்றையுமே அவர்கள் மறந்தனர். அவருடைய பரிசுத்தத்தை மறந்தனர். அவருடைய நியாயப்பிரமாணத்தை மறந்தனர். பெண்கள் மற்ற பெண்களைப் போன்று வாழ்ந்தனர். 21தேவனுடைய சபையும் அவருடைய மக்களும் எப்போதும் வேறு பிரிக்கப்பட்ட, வெளியே அழைக்கப்பட்ட ஜனங்களும். வினோதமான ஜனங்களும், தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும் ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் உதடுகளின் கனிகளாலே ஸ்தோத்திர பலிகளை அவருடைய நாமத்திற்கு செலுத்துகிறவர்களாயும் இருப்பார்கள். தேவன் அவருடைய சபையை அழைத்து, இந்த காரணத்திற்காகத்தான் உலகத்திலிருந்து அதை வேறுபிரித்தார். அதற்கு ஒரு நியாயப்பிரமாணத்தை அளித்தார். அவர், அது பரிசுத்தமாயிருக்க வேண்டும். அவர், ''நான் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் பரிசுத்தராயிருங்கள். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரை தரிசிப்பதில்லையே' என்று கூறினார். இதைப் போன்று தான் இம்மக்கள் இருக்க வேண்டுமென்று அவர்களை அவர் அழைத்தார். ஆனால் அதைக் குறித்து அவர்கள் மறந்து போனார்கள். அவர்கள் அவருடைய நியாயப்பிரமாணத்தை மறந்தார்கள், தங்களுடைய நெறிமுறைகளை மறந்தார்கள். தெருக்களில் இருக்கும் பெண்கள், ஒவ்வொரு இஸ்ரவேல் ஸ்திரீயும் தாங்கள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பம் தரிக்கப்பட்டு மேசியாவை வெளிக் கொணர்வதற்காக காத்து கொண்டிருந்தனர். அதைப் போன்று செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களுடைய பண்பானது மிகவும் மோசமாக இருந்தது. இங்கு நான் ஒரு நிமிடம் நிறுத்தி அதே போன்றுதான் இன்று, கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் நம் மக்களின் மத்தியில் உள்ளது என்று கூற விரும்புகிறேன். நீ மாத்திரம் அவர்கள் குணாதிசயத்தை உணர்ந்து கொள்வாயானால்! 22ஒரு சமயம் தெற்கிலிருந்து வந்த, அவர்கள் அடிமைகளை வைத்திருந்தபோது சம்பவித்த ஒரு கதையை நான் படித்தேன். அவர்கள் அம் மக்களை கொண்டு போய் சந்தைகளில் விற்பார்கள். நீ ஒரு உபயோகிக்கப்பட்ட காரை விற்பது போல. அங்கு ஒரு தரகர், வாங்குபவர் வந்து இந்த அடிமைகளை எடுத்து அவர்களை வியாபாரம் செய்வார். நீ எப்படி ஒரு காரையோ அல்லது வேறெதாவதைச் செய்வது போல. அந்த அடிமைகள் தங்கள் தேசத்தை விட்டு வெளியே இருப்பவர்கள். அவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர். போயர்கள் (Boers) அவர்களைக் கடத்தி இங்கு உள்ள தீவுகளுக்கு அவர்களைக் கொண்டு வந்து, ஜமைக்கா மற்றும் பிற இடத்திலிருந்து ஐக்கிய நாடுகளுக்குள் கள்ளத்தனமாக கொண்டு வந்து அடிமைகளாக விற்றனர். இம்மக்கள் கவலை கொண்டவர்களாய் இருந்தனர் என்று நாம் காணலாம். ஏனெனில் அவர்கள் தங்கள் சொந்த வீட்டிலிருந்து கடத்தப்பட்டனர். அவர்கள் எதிரியால் வெளியே கொண்டு வரப்பட்டதால் கவலையாய் இருந்தனர். அவர்கள் மறுபடியும், தங்கள் கணவரையோ, மனைவியையோ, பிள்ளைகளையோ, தாய் தந்தையரையோ, காண முடியாது. அவர்கள் முற்றிலுமாக அவர்களை வேலை செய்ய வைப்பதற்கென சாட்டையால் அடிக்கப்பட்டனர். அவர்கள் கவலை கொண்ட ஜனங்களாய் இருந்தனர். 23ஒரு நாள், தரகன் ஒரு தோட்டத்திற்கு வந்து அங்கு வெளியில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டம் அடிமைகளை கண்டான். ஆதலால் அவன் சென்று எஜமானனை நோக்கி “எத்தனை அடிமைகளை நீர் வைத்திருக்கிறீர்?'' என்று கேட்டான். அவன் “நூறு இருக்கலாம்'' என்றான். ''விற்கவோ, அல்லது மாற்றிக் கொள்ளவோ உம்மிடம் யாராவது உள்ளனரா?'' என்று கேட்டான். ''ஆம்'' என்றான். ''நான் பார்க்கட்டும்'' என்றான். ஆகவே அவன் வயல்வெளியில் சென்று அவர்களை கவனித்தான். அவர்கள் சாட்டையால் அடிக்கப்பட வேண்டும் என்பதை அவன் பார்த்தான். சிறிது நேரம் கழித்து இவர்கள் சாட்டையால் அடிக்க தேவையில்லாத ஒரு வாலிபனைக் கண்டான். இவன் தன் நெஞ்சையும், தன் முகத்தையும் நிமிர்த்தி நின்றவனாய் இருந்தான்; அவன் அடிக்கப்பட வேண்டியதில்லை. ஆதலால் அந்த தரகன் “நான் அந்த அடிமையை வாங்க விரும்புகிறேன்'' என்றான். அதற்கு அவன் (எஜமானன் - தமிழாக்கியோன்) “அவன் விற் பனைக்கு அல்ல'' என்றான். ''நல்லது. அந்த அடிமையின் வித்தியாசத்தனம் என்ன? மற்ற எல்லாருக்கும் அவன் தலைவனா?'' என்று கேட்டான். அதற்கு அவன் (எஜமானன்-தமிழாக்கியோன்) ''இல்லை அவனும் ஒரு அடிமைதான்'' என்றான். ''நல்லது. அவனை வேறு விதமாக போஷிக்கின்றீரா?'' என்று கேட்டான். ''இல்லை, மற்ற எல்லா அடிமைகளோடும் அந்த தளத்தில் (GALLEY) தான் அவன் சாப்பிடுகிறான்'' என்று கூறினான். ''நல்லது எது அவனை மற்ற அடிமைகளிலிருந்து மிகவுமாக வித்தியாசப்படுத்துகிறது?'' என்று கேட்டான். “நல்லது. நானும் இதைப் பற்றி நீண்ட நாளாக ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு நாள் நான் அறிந்து கொண் டேன். அதாவது அவன் விட்டு வந்திருக்கிற அவனுடைய நாட்டிலே, ஒரு முழு இனமரபு குழுவிற்கு (Tribe) அவனுடைய தந்தை தான் ராஜா ஆவார். ஆனாலும் இவன் வீட்டிற்கு வெளியே இருந்தாலும், அன்னிய இடத்திலே இருந்தாலும், தான் ஒரு ராஜாவின் குமாரன் என்று அவன் அறிந்திருக்கிறான். தன்னை ஒரு ராஜாவின் குமாரனைப் போன்று நடத்திக் கொள்கிறான்'' என்று அவன் (எஜமானன் - தமிழாக்கியோன்) கூறினான். 24ஆனாலும் ஆப்பிரிக்காவிலிருந்து வருகின்ற ஒரு கறுப்பு இன மனிதன் தன் தகப்பன் ஒரு இனமரபு குழுவிற்கு (TRIBE) ராஜாவாயிருக்கிறான் என்று அறிந்திருப்பானானால் ஒரு மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ நம்முடைய பிதா தான் மகிமையிலிருக்கும் வானாதி வானத்தின் தேவன் என்று அறிந்து எப்படி இருக்கவேண்டும் என்று நான் எண்ணினேன். நாம் நம்மை ஒரு கிறிஸ்தவ மனிதனாகவே, ஸ்திரீயாகவே நடத்திக் கொள்ள வேண்டும்! நாம் அதைப் போன்று நடக்க, உடையுடுத்திக் கொள்ள, பேச, ஜீவிக்க வேண்டும். நாம் அந்நியராயிருந்தாலும் நாம் ராஜாவின் பிள்ளைகளாய் இருக்கிறோம். ஆமென். இஸ்ரவேலானது அதே குழியில் விழுந்து, சீர்கெட்டுப் போனது, நம்முடைய குணாதிசயம், சீர்கேடு நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிற இந்நாட்களைப் போல! அவர்கள் தேவனுடைய பிரமாணங்களை மறந்தனர். “விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக'' இன்னும் மற்றைய காரியங்களை, அவர்கள் அந்த பிராமணங்களை மறந்தனர். அது இனிமேல் அவர்களுக்குத் தேவையில்லை. எப்படி சபையானது இப்பொழுது இருக்கின்றதோ அதே போன்று அவர்கள் மற்ற உலகத்தாரைப் போன்று வாழ விரும்பினர். 25ஒரு சமயம் இஸ்ரவேலர் தங்களுக்கு அனுப்பப்பட்ட தீர்க்கதரிசியாகிய சாமுவேலை நோக்கி தங்களுக்கு ஒரு ராஜா தேவை என கேட்க ஆரம்பித்தனர். அவன் அவர்களிடம், ''இப்பொழுது கர்த்தருடைய நாமத்தில் நான் கூறின காரியம் ஏதாகிலும் நிறைவேறாமல் போனதுண்டா?'' என்று கேட்டான். அதற்கு அவர்கள் ''நீர் அவ்வாறு இல்லை'' ''சாப்பாட்டிற்காக, பணத்திற்காக, உங்கள் பணத்திற்காக, ஜீவனம் செய்வதற்காக உங்களிடம் நான் மன்றாடியிருக்கிறேனா?'' “இல்லை, நீர் அவ்வாறு செய்யவில்லை. நிகழாத காரியங்களை ஒன்றையும் நீர் உரைக்கவில்லை. சாமுவேலே, நீர் உமது ஜீவனத்திற்காக எங்கள் பணத்தை கேட்கவில்லை. ஆனால் எப்படியாயினும் எங்களுக்கு ஒரு ராஜா தேவை'' என்றனர். தேவன் சாமுவேலிடம் ''அவர்கள் அவனை பெற்றுக் கொள்ளட்டும், அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. நான் அவர்களை ஆளாதபடிக்கு என்னைத்தான் தள்ளினார்கள்'' என்றார். 26இஸ்ரவேல் அதைப் போன்றுதான் இப்பொழுது ஆனது. அவர்களுக்கு இனி தேவனுடைய தீர்க்கதரிசிகள் தேவையாயிருக்கவில்லை. அவர்கள் (தீர்க்கதரிசிகள் - தமிழாக்கியோன்) அவர்களுக்கு தேவையில்லை. யாராவது ஒருவன் வந்து, அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை கொண்டு வந்து அவர்களை மறுபடியுமாக தேவனுடைய வார்த்தைக்கு கொண்டு வர முயற்சித்தால் அவன் அவர்களால் நிராகரிக்கப்படுவான். அப்பேற்ப்பட்ட சீர்கேட்டின் மூலம் அதை அவர்கள் எப்பொழுதும் செய்வர். உலகமும் சபையும் ஒன்றாக இணையும்போது ஆவிக்குரிய ஒன்று ஒருபோதும் அவர்களுக்கு தேவைப்படாது. கர்த்தர் உரைக்கிறதாவது என்பதும் அவர்களுக்கு தேவை இல்லை. அவர்கள் விருப்பமே அவர்கள் தேவையாயிருந்தது. அவர்களுக்கு உலகம் தேவையாயிருந்தது. தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு, உலகத்தில் அவர்கள் வாழ்ந்து உலகத்தாருடனும், உலகத்தாரைப் போலவும் வாழ்ந்து இன்னுமாய் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை செய்ய விரும்பினர். அது என்ன என்பதை நீங்கள் அறிவீர்களா? அது தான் ஆவிக்குரிய நினைவிழப்பாகும். சரியாக அதுதான். தாங்கள் யார் என்பது அவர்களுக்கு தெரியாது. தாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் மறந்து போனார்கள். 27அதைப் போன்ற ஒன்று இன்றைக்கு வருமானால், அது அப்படியே நிராகரிக்கப்படும். அவர்கள் மோசமான நிலையில் இருந்தவர்களாய் காணப்பட்டனர். ஆகவே இன்றைக்கும் அதே போன்றுதான் இருக்கின்றனர். இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களுடன் ஒருபோதும் தங்களை அடையாளம் கண்டு கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் அது அவர்களுக்கு தேவை இல்லை. வார்த்தை, சுவிசேஷம் அவர்களுக்குத் தேவையில்லை. பாவ நோயானது அவர்களை பீடித்துள்ளது. அதை அவர்கள் நேசித்தனர். மாற்றப்படாத ஒரு இருதயத்திற்கு பாவமானது மகிழ்ச்சி அளிக்கின்ற ஒன்றாய் இருக்கும். மாற்றப்படாத மனதிற்கு அது அருமையானதாக இருக்கும். ஆனால் அது மரணத்திற்குரிய வழியாகும். மரணத்தைத் தவிர வேறொன்றும் மீதம் இருக்காது. ''பாவத்தின் சம்பளம் மரணம்''. ஆகவே சம்பளமாகிய அறுவடையை நீ செய்தாக வேண்டும். நீ காற்றுக்கு (winds) விதைத்தாய், இப்பொழுது சூறாவளி காற்றை (whirl wind) அறுக்கிறாய். தேவனால் அபிஷேகிக்கப்பட்டு அனுப்பப்பட்ட தூதனுடைய பிரசங்கமும், “ஆவிக்குரிய அடையாளங்களும் இனியும் அவர்களை எழுப்புதல் கொள்ள செய்யாது. ஸ்திரீகளும் அவர்கள் முகத்திற்கு நேராக அவர்களை ஏளனம் செய்து அதைப் போன்ற காரியத்தை நான் சென்று கேட்கத் தேவை இல்லை'' என்று கூறுவார்கள். அது மறுபடியுமாக நிகழ்ந்துள்ளது! அது என்ன? ஆவிக்குரிய நினைவிழப்பு. சரியாக அது தான். தேவனும் அவருடைய வார்த்தையும் ஒன்றுதான் என்றும் அதை அவர் மாற்ற முடியாது என்றும் அவர்களுக்கு நினைவில் இல்லாமல் மறந்து போய் இருக்கின்றனர். 28அவர்கள் நாட்களில் ஒரு தீர்க்கதரிசி காட்சியில் எழும்பி அவர்களுக்கு ஒரு ஆவிக்குரிய அடையாளம், ஒரு ஆவிக்குரிய சத்தத்தை அருளி அதன்பின் அவர்களுக்கு தேவனுடைய சத்தத்தைக் கொடுத்தால், அவர்கள் நகைத்து ஏளனம் தான் செய்வார்கள். “தேவ தூதர்களும் செல்ல பயந்துள்ள இடத்திற்கு முட்டாள்கள் பெருந்தலை ஆணிகள் கொண்ட காலணிகளை (Hobnailed shoes) அணிந்து செல்வர்'' என்ற ஒரு பழைய பழமொழியை நீங்கள் அறிவீர்களா? அதைத்தான் இந்த ஆவிக்குரிய நினைவிழப்பு செய்கிறது. இது ஜனங்கள் தங்கள் உள்ளுணர்வை மறக்கும் நிலைமைக்கு கொண்டு செல்கின்றது. ஆவிக்குரிய எதுவும் அவர்களுக்கு தேவையாய் இருக்கவில்லை. ஒரு உண்மையான ஆவிக்குரிய கூட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு பரிசுத்த ஆவியானவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தி, இருதயத்தின் ரகசியங்களைப் பகுத்தறிந்து, அங்குள்ள அரங்கத்தில் எல்லா சபைகளும் கூடியிருக்கும்போது அந்த மாபெரும் கூட்டத்தில் இவைகளைச் செய்வாரானால் என்ன நடக்கும். சில நிமிடங்களில் எல்லோரும் எழுந்து வெளியில் சென்றுவிடுவார்கள். அதனுடன் எதுவும் செய்ய அவர்களுக்கு விருப்பம் இராது. ஏதாவது ஒரு அறிவுத் திறமையுடையவர் பேச்சைத்தான் கேட்பார்கள். 29ஆனால் இயேசு கிறிஸ்துவினுடைய வல்லமை, அவருடைய உயிர்த்தெழுதல், மற்றும் பரிசுத்த ஆவி என்னும் காரியங்களுக்கு வரும்போது, அதனுடன் அவர்களால் ஒன்றும் செய்ய விருப்பமிராது. ஏனென்றால் அது அவர்களை கடிந்து கொள்ளும். அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய காரியங்களுடன் கூட சேர்ந்து அவர்களைத் தீ மூட்டும். கண்டித்து உணர்த்துதல். ஒருக்கால், அந்த காலத்திற்கு, மகிழ்ச்சி தருவதாய் இருக்காது. ஆனால் நீ அதற்கு உன்னைக் கீழ்ப்படுத்துவாயானால் அது உனக்கு மனந்திரும்புதலின் கனிகளைத் தரும். ஆகவே இந்த ஆவிக்குரிய நினைவிழப்பானது (SPIRITUAL AMNESIA) மக்களை பீடிக்குமானால் அவர்கள் மோசமான நிலையை அடைவார்கள் என்று நாம் காணலாம். அதே காரியம் இன்றைக்கு உள்ளதை நாம் காணலாம். இப்பொழுது... நீ அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். எங்கேயாவது நீ அதை காண்பிக்க வேண்டும். இன்றிரவு நீ எங்கு அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றாய் என்பதை உன்னுடைய ஜீவியம் காண்பிக்கும். நீ கிறிஸ்துவிற்கு உள்ளே அல்லது கிறிஸ்துவிற்கு வெளியே அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். நீ பாதி மனிதனாக இருக்க முடியாது. குடித்து விட்டு போதை அடையாமல் ஒரு மனிதன் இருக்க முடியாது. கறுப்பு வெள்ளை பறவை என்பது கிடையாது. நீ ஒன்று இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது இரட்சிக்கப்படாமல் இருக்க வேண்டும். நீ ஒரு பரிசுத்தவானாக அல்லது பாவியாக இருக்கவேண்டும். ஒன்று அல்லது மற்றொன்றாக இருக்க வேண்டும். ஆகவே தேவனுடைய வார்த்தையைக் குறித்த உன்னுடைய ஆவிக்குரிய மனப்பான்மை நீ சரியாக எங்கு நிற்கின்றாய் என்று உன்னை அடையாளம் காண்பிக்கும் சரியா! அன்று பெந்தேகொஸ்தே நாளிலும் அல்லது வேறொரு சமயத்திலும் விழுந்த முதற்கொண்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இப்பொழுதும் அதேதான் என்பதை தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்தி நிரூபித்தது. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். இதைக் குறித்த உன்னுடைய மனப்பான்மை நீ ஆவிக்குரிய நினைவிழப்பு கொண்டவனா அல்லது இல்லையா என்பதை அடையாளம் காண்பிக்கும். அது சரி. நீ ஒரு மூப்பனாகவோ, அல்லது பிரசங்கியாகவோ இருந்தாலும் ஒரு பொருட்டல்ல. அது ஒரு... ஆம், அவர்களும் அதை (ஆவிக்குரிய நினைவிழப்பு - தமிழாக்கியோன்) பெற்றுக் கொள்வார்கள். ஆகவே அது தொற்றும் தன்மை கொண்டது என்றும், முழுவதையும் தாக்கும் என்றும் நாம் காணலாம். இப்பொழுது நாம் கவனிப்போம். 30இப்பொழுது நான் ஒரு அமெரிக்கனாய் இருக்கும் பட்சத்தில் நான் என் தேசத்துடனே அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். நான் பிறந்திருக்கும் இந்த தேசத்தில் ஒரு அமெரிக்கனாக இருக்க வேண்டுமென்றால், நான் ஒரு குடிமகனாகி இத்தேசத்தோடு அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். எல்லாமும், எதுவாயிருந்தாலும் நான் ஒரு அமெரிக்கனாக அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். ஆகவே நான் ஒரு அமெரிக்கனாக கண்டு கொள்ளப்படுவதால் அதன் எல்லா இழிவு நிலையும், எல்லா மகிமையும் நான் பெற்றுக் கொள்ள வேண்டும். அது எதுவாயிருந்தாலும், நானும் அப்படியே. ஏனென்றால் நான் அதனுடன் அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறேன், ஆமென். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் ஒரு அமெரிக்க குடிமகனாக அடையாளம் கண்டுகொள்வதால், அது எப்படியோ, நானும் அப்படியே. நான் ஒரு அமெரிக்க குடிமகன், நான் அமெரிக்காவின் ஒரு பாகம். ஆகவே அதெல்லாம் நான் தான். 31நான் இதை ஒருபோதும் மறக்கக் கூடாது. நான் ஒரு உண்மையான அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டுமென்றால் என் தேசம் எதுவோ அதுதான் நான் என்று நினைவில் கொள்ளவேண்டும். ஏனெனில் நான் என் தேசத்துடனே அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். மறந்தால்... தேசத்திற்காக சண்டையிடவோ, மரிக்கவோ, அதற்காக நிற்கவோ, எதெல்லாம் செய்யப்படுகிறதோ அதற்காக நான் நிற்க வேண்டும். என் தேசம் என்னவோ அது நான்தான். அது எதற்காக நிற்கின்றதோ, அதற்கு நான் நிற்பேன். ஒரு உண்மையான அமெரிக்கனாக இருக்க வேண்டுமென்றால் அதற்காக மரிக்க, சண்டையிட, நிற்க அதற்காக எதையும் செய்யத் தயாராக இருப்பேன். நான் அதின் பாகமாக உள்ளேன். என்னைத் தொடாமல் அதை நீ தொட முடியாது. அதற்கெதிராக எதையாகிலும் நீ கூறினால் எனக்கெதிராகத்தான் கூறுகிறாய். ஏனெனில் நான் ஒரு அமெரிக்கன். ஒரு அமெரிக்கன் என்கிற முறையில் உனக்கெதிராக ஒன்று கூறப்படுமானால் அது தேசத்திற்கு எதிராக கூறப்படுவதாகும். ஏனென்றால் நீ அதன் பாகமாயிருக்கிறாய். இதை நீ எப்போதும் மறக்காதே. அப்படிச் செய்வாயானால், உனக்கு நினைவிழப்பு (AMNESIA) வந்துள்ளது. நிச்சயமாக. நினைவுகொள், நீ அதில் பாகங்கொள்ளவில்லை என்றால் நீ ஒருபோதும் அமெரிக்க குடிமகனாக இருக்க முடியாது. நீ இருக்கத்தான் வேண்டும். அமெரிக்கா என்னவோ அதுவாகத்தான் நீ இருக்க வேண்டும். நான் அதில் பங்கெடுக்க வேண்டியவனாய் இருத்தல் வேண்டும். இது என்னுடைய தேசமாதலால் அதின் காரியங்களில் நான் பங்கேற்க வேண்டும். அது என்னவோ அது நான். பாருங்கள் அவள் என்னவாய் இருந்தாளோ அது நான். அவள் (அமெரிக்கா - தமிழாக்கியோன்) என்னவாய் இருந்தாலும் பரவாயில்லை, நான் இன்னுமாய் அவள்தான். இறங்கினேன். நான் அப்படி செய்யவேண்டும்; நான் அவளின் ஒரு பாகம். அவளுக்கு வரும் ஆபத்துக்களிலிருந்து எச்சரிக்க நான் பால் ரெவிருடன் (Paul Revere) சவாரி செய்தேன். நான் ஒரு உண்மையான அமெரிக்க குடிமகனானால் நான் பிளைமௌத் பாறையில் இறங்கினேன். அவளுக்கு வரும் ஆபத்திற்காக எச்சரிக்க நான் பால் ரெவிருடன் சென்றேன். நான் என்ன கூற விழைகிறேன் என்பது புரிகின்றதா?பனியால் நிறைந்த டெலிவாரேவை (Delaware) ஜார்ஜ் வாஷிங்டனுடனும் வெறுங்காலுடன் இருந்த அவருடைய போர் வீரர்களுடன் நான் கடந்து சென்றேன். நான் அங்கிருந்தேன். ஏனென்றால் நான் இத்தேசத்துடனே அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். அவர் அங்கு என்ன செய்தாரோ அதில் என் பாகம் உண்டு; நான் இப்பொழுது செய்து கொண்டிருப்பது அவருடைய பாகமே. டெலிவாரேவில் வாஷிங்டனுடன் நான் அடையாளங் கொள்ளப்படுகிறேன். ஸ்டோன்வால் ஜாக்ஸனுக்கு (Stonewall Jackson) காரியங்கள் மிகவும் எதிராக இருந்த நேரத்தில் நான் அவருடன் நின்றேன். “காரியங்கள் இப்படி உனக்கெதிராக இருக்கையில் எப்படி (ஸ்டோன்வால் என்றால் தமிழில் பாறாங்கல் சுவர் என்று அர்த்தம் தமிழாக்கியோன்) நிற்கின்றாய்?'' என்று அவர்கள் அவரிடம் கேட்டார்கள். அதற்கு, நீல நிறக் கண்களை உடைய அந்த துடிப்பான மனிதன், தன் காலணியினால் மண்ணை உதைத்து நான் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு நன்றி செலுத்தும் வரை தண்ணீர் கூட குடிக்க மாட்டேன்'' என்றான். நானும் ஒரு பாறாங்கற் சுவர் (Stonewall) போன்று அவனோடு நிற்கவேண்டும். நான் ஸ்டோன்வால் ஜாக்சனுடன் அங்கு நின்றேன். நான் ஒர் அமெரிக்கனானதால் அவனுடனும் அவனுடைய கொள்கையிலும், டெலிவாரேவைக் கடக்கும் போதும்! போரிடும் போதும்! நான் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறேன். 32குவாமில் (Guam) அவர்கள் கொடியை ஏற்றினபோது நான் அவர்களோடிருந்து நானும் கொடியை ஏற்றினேன். ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தபிறகு, அந்த சிறிய குழுவானது அங்கு ஓடிச் சென்று, கொடியை மேலே ஏற்றின போது அக்கொடியேற்றத்தில் நானும், நாமெல்லாரும் அடையாளம் கண்டு ஒரு அமெரிக்கனாய் இருக்கும் பட்சத்தில் நான் பிளைமெளத் பாறையில் (Plymouth rock) அவளுடனும், முற்பிதாக்களுடனும் நான் கொள்ளப்படுகிறோம். குவாமில் (Guam) தொங்கி கொண்டிருக்கும் அந்தக் கொடியில் எல்லா அமெரிக்கர்களும் அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றனர். அங்கு கொடியேற்றியதை நான் கேள்விப்பட்டபோது கண்ணீர் என் கன்னங்களில் வழிந்தோடியது. அது நான்தான். அது நீங்கள்தான். நாம் அதனுடன் அடையாளம் கண்டு கொள்ளப்படும் போது அது நாம் எல்லாரும்தான். அவளுடைய எல்லாமே நான்தான். அவளுடைய எல்லா மகிமையும் என்னுடைய மகிமைதான். அவளுடைய எல்லா இழிவு நிலையும் என்னுடைய இழிவு நிலைதான். அவள் இழிவான காரியங்களைச் செய்வாளானால் நான் அவளை உற்றுப் பார்த்து... அவளைக் கடிந்து கொள்ளவேண்டும். அவள் மகிமையை பெற்றுக் கொள்வாளானால் நானும் அவளுடன் மகிமையைப் பெற்றுக் கொள்வேன். ஏனெனில் நான் அவளுடன் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறேன். இப்பொழுது ஒரு அமெரிக்கனாக அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டுமென்றால் அவளுடைய இழிவு நிலைக்காகவும், மகிமைக்காகவும், எப்படிப்பட்ட நிலையாய் இருந்தாலும் நிற்கவேண்டும் அல்லது அவள் எப்படி இருந்தாலும், நீ அதனுடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்றாய், 33இப்பொழுது, ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருக்க வேண்டுமானால், நீ அதை போன்றே இருத்தல் வேண்டும். அதை நாம் மறக்க வேண்டாம். அவர் எப்படி இருந்தாரோ, நான் அவருடன் அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறேன். கவனியுங்கள். அவர் என்னுள் இருக்கிறார், நான் அவருள் இருக்கிறேன். கவனியுங்கள். ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனும் அவருடன் இருக்கிறான். “உலகமானது அஸ்திபாரம் போடப்படுவதற்கு முன்னால், அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய் பாடி தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே'' கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், நித்திய மண்டலங்களிலே தேவனுடன் நாம் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறோம். அங்கு நான் அவருடன் இருந்தேன். எனக்கு நித்திய ஜீவன் இருந்ததினால் நான் அங்கு அவருடன் இருந்தேன். அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். ”அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய் பாடி தேவப் புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே'' ஆபிரகாமிற்கு எழுபத்தைந்தும், அவனுடைய மனைவியாகிய சாராளுக்கு அறுபத்தைந்து வயதாயிருக்கும்போது, அவர் அவர்களை அழைத்து, “அவர்கள் ஒரு குழந்தையைப் பெறப் போகிறார்கள் என்று கூறினபோது நான் அவருடன் இருந்தேன். நான் எப்படியும் குழந்தையைப் பெறப் போகிறேன்'' என்று அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதன்மேல் நின்றபோது நான் அவனுடன் இருந்தேன். நானும் அவனோடு நின்றேன். மற்ற எல்லா கிறிஸ்தவரும் அவனுடன் நின்றார்கள். அவனுக்கு சோதனைகள் வந்தபோது அவனுடன் நான் இருந்தேன். அவன் ஈசாக்கை பலி கொடுக்க மலை உச்சிக்கு சென்றபோது நான் அவனோடிருந்தேன். ஆட்டுக்கடா தோன்றின போது நான் அவனுடன் இருந்தேன். 34யோசேப்பு தன்னுடைய சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டபோது நான் அவனுடன் இருந்தேன். ஏனென்றால் அவன் ஆவிக்குரியவன். மற்றவர்களோ மாம்சத்திற்குரியவர்கள். தன் சகோதரர்களால் தனக்கு நேரிடப்போகும் தீங்குகளை அவன் அறிந்தபோது நானும் அவனுடன் இருந்தேன். அவன் என்னவாய் இருந்தானோ, அது நான் தான். நான் என்னவாய் இருக்கிறேனோ, அது அவன்தான். ''கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் எல்லோரும் ஒன்றாயிருக்கிறோம்'' யோசேப்பு அவனுடைய குகையில், கல்லறையில் இருந்தபோது நான் அவனுடன் இருந்தேன். அவன் பார்வோனுடைய வலது கரமாக அவன் உயர்ந்த போது நான் அவனுடன் இருந்தேன். நீயும் அவனுடன் அடையாளங் கண்டுகொள்ளப்படவேண்டும். யாக்கோபு தூதனுடன் அந்த இரவு முழுவதும் போராடின போது நான் அவனோடிருந்தேன். நானும் போராடினேன். அவன் எதைக் கடந்து சென்றவனாய் இருந்தான் என்பது எனக்குத் தெரியும். ஆகவே யாக்கோபு போராடின அதே நேரத்தில் நான் அவனுடன் சேர்ந்து போராடினேன். ஏனெனில் நான் அவனுடைய சகோதரன். மோசே எகிப்திற்கு சென்றபோது நானும் அவனுடன் இருந்தேன். எரிகின்ற முட்செடியினிலே அவனோடு நானும் இருந்தேன். நீ ஒரு கிறிஸ்தவனாய் இருந்தால் வேதத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களுடனும் நீ அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். அதை மறவாதே! ஜனங்கள் எல்லோரும் மோசேவிற்கு எதிராக திரும்பின போது நான் அவனுடன் இருந்தேன். சிவந்த சமுத்திரத்தை மோசே கடந்த போது நானும் அவனோடிருந்தேன். அவன் தன் கரங்களை உயர்த்தி முன்னேறிய போது சிவந்த சமுத்திரமானது திறந்தது. அந்த நேரத்தில் தான் நான் கிறிஸ்துவுக்குள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டேன், அந்த மணி நேரத்திலே நான் மோசேயோடு இருந்தேன். 35எப்படி ஒவ்வொரு கிறிஸ்தவனும் இருந்தானோ, எப்படி ஒவ்வொரு விசுவாசியும் இருந்தார்களோ, இப்பொழுது ஒவ்வொரு விசுவாசியும் அதே நபருடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறான். அது என்னவாய் இருந்தாலும், அதனுடன் நீ அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். அதை மறவாதே. அப்படி மறந்தாயானால் நீ ஆவிக்குரிய நினைவிழப்பை பெற்றுள்ளாய்; நீ யாரென்பதை மறந்து போயிருக்கிறாய். மோசே சமுத்திரத்தை கடந்தபோது இப்பொழுது அவனுடன் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறோம். ஆகாபின் நாட்களிலே, தேவனையோ அல்லது, பிலேயாமையோ சேவிக்க வேண்டுமென்று அவர்கள் தெரிந்தெடுக்க வேண்டிய நேரத்தில் தோன்றிய எலியாவுடன் நான் இருந்தேன். அவன் அந்த தெரிந்தெடுத்தலைச் செய்ய கர்மேல் பர்வதத்தின் மேல் இருந்தபோது நாமும் அவனுடன் இருந்தோம். ஏனென்றால் அவன் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட அதே தேவனுடைய சரீரத்தில் நாமும் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றோம். ஆகவே அந்த சரீரத்தில் அடையாளங் கண்டுகொள்ளப்படுவோமானால், நாம் நினைவில் கொள்ள வேண்டும் அங்கே நாமும் அவரோடு இருந்தோம். அது சரி. 36தாவீது தன் சொந்த சகோதரரால் புறக்கணிக்கப்பட்டபோது நான் அவனோடு இருந்தேன். நான் தாவீதுடன் இருந்தேன்; நீயும் ஒரு கிறிஸ்தவனாய் இருந்தால் அவனுடைய புறக்கணிக்கப்படுதலில் நீயும் அடையாளம் கண்டு கொள்ளப்படவேண்டும். எரிகிற அக்கினிச் சூளையில் இருந்த எபிரேய பிள்ளைகளுடன் நானும் இருந்தேன். அங்கு நான்காவதாக ஒரு மனிதன் இருந்தபடியால் அந்த அக்கினியானது அவர்களை எரிக்க முடியவில்லை. சிங்கக் கெபியில் நான் தானியேலுடன் இருந்தேன். கர்த்தருடைய தூதன் அவனை அங்கே அடையாளங் கண்டபோது நானும் அங்கே அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். நான் அதிநிச்சயமாக அவருடன் கல்வாரியிலே இருந்தேன். கல்வாரியில் அவருடன் நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். கல்வாரியிலே அவருடனே நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட மாத்திரம் அல்லாமல் அவருடன் நான் கல்வாரியில் மரித்தேன் என்கிற நிலையில் நான் இருக்கவேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவருடன் கல்வாரியில் மரிக்க வேண்டும். அவருடன் கல்வாரியில் நீ மரிக்கவில்லை என்றால், அவருடைய எந்த ஒரு காரியத்திலும் நீ இருக்க முடியாது. அவர் மரித்தபோது நான் அங்கிருந்தேன். நான் அவருடன் மரித்தேன். அவர் மரித்தோரிலிருந்து உயிரைடைந்த போதும் நான் அவருடனே இருந்தேன். ஈஸ்டர் காலையில் உயிர்தெழுதலில் நானும் மேலே வந்தேன். அவர் என்னவெல்லாம் செய்தாரோ அங்கே சரியாக நானும் அவருடன் இருந்தேன்; ஒவ்வொரு விசுவாசியும் அதே போன்றுதான். 37பாதாளத்திலுள்ள எல்லா வல்லமைகளும் அவர் மூலமாய் வெல்லப்பட்டது. இப்பொழுது நான் கிறிஸ்து இயேசுவிற்குள் உன்னதங்களில் அவருடன் அமர்ந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசியும் அவ்வாறே அமர்ந்து கொண்டிருக்கிறான். ஏனென்றால் நீ அடையாளம் கண்டுகொள்ளப்படவேண்டும். இந்தக் கடைசி நாட்களிலே அவருடைய ஊழியத்திலே அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்ற விசுவாசிக்கின்ற கிறிஸ்தவர்கள் மத்தியில் என்னைக் கண்டுகொள்கிறேன். ''அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்“ அவருடைய ஊழியத்தின் மூலம் இந்நாளில் என்னை அடையாளங் கண்டுகொள்கிறேன். நீங்களும் அதை விசுவாசித்து, அதனுடன் நடக்கையில் அதேபோன்று உங்களை கண்டு கொள்கிறீர்களா? கவனியுங்கள். அவர் செய்த கிரியைகளை, அதே போன்று ஒவ்வொரு விசுவாசியும் செய்வான் என்று அவர் கூறியுள்ளார். ''நான் செய்த கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' ஆகையால் நீங்களும் அடையாளம் கண்டு கொள்ளப்பட முடியும்? பிறகு வார்த்தையினிமித்தம் நிந்தை வரும்போது, அவர் நிந்தையை சகித்து நின்றவாறு உங்களால் நிற்கமுடியுமா? பாருங்கள். அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுதல்? நான் அவருடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். 38பெந்தேகொஸ்தே நாளிலே அவருடன் நான் இருந்தேன். அங்கிருந்த சீஷர்களுடன் நான் இருந்து, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் நான் அவர்களுடன் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டேன். பரிசுத்த ஆவி என ஒன்று உண்டு என்று விசுவாசிக்காத அளவிற்கு சில சபைகள் இப்பொழுது மிகவுமாக நினைவிழப்பு வியாதியினால் (Amnesia) பீடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு நான் ஆச்சரியமுறுகிறேன். பாருங்கள் சபையானது எங்கு சென்றுள்ளதென்று? நினைவிழப்பு வியாதியினால் பீடிக்கப்பட்டுள்ள ஒரு மோசமான நிலைக்கு பாருங்கள். இயேசு கிறிஸ்து மறுபடியுமாக அங்கு வந்துள்ளார் என்பதை அவர்கள் மறந்து போயிருக்கின்றனர். இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதையும் அவர்கள் மறந்து போயிருக்கின்றனர். அவர்கள் மறந்துள்ளனர். அவர் ஒரு பிரமாணத்தை அளிப்பவர், அல்லது ஒரு தீர்க்கதரிசி, அல்லது ஒரு நல்ல மனிதரென்று அவரை நினைத்தனர். அவர் தேவன் என்பதை அவர்கள் மறந்து போய் உள்ளனர். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்பதை மறந்து போயினர். ஆகவே சபையானது ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியின் மோசமான நிலையை அடைந்துள்ளது. இவை எல்லாவற்றையும் அவர்கள் மறந்துள்ளனர். அதை அவர்களால் இன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. 39நாம் பெந்தேகொஸ்தே நாளிலே சீஷர்களோடு இருந்து அவர்களுடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்திலுள்ள பேதுருவின் பிரசங்கத்தில் நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டேன். அவன் என்ன கூறினான் என்பதை நான் கேட்டேன். அவன் என்ன கூறினான் என்பதை நான் விசுவாசிக்கிறேன். அவன் என்ன கூறினானோ அதற்கு நான் கீழ்ப்படிந்தேன். இப்பொழுது அதே காரியத்துடன் நான் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறேன். ஆவிக்குரிய நினைவிழப்பின் (Spiritual amnesia) வியாதியை நீங்கள் பெற்றுக் கொள்ளாதீர்கள். ஏனெனில் அது உன்னை வேறொரு காரியத்துடன் அடையாளம் காண்பித்துவிடும். வார்த்தையுடன் சரியாக நில்! அப்போஸ்தலர் 16-ம் அதிகாரத்தில் சபையானது இயேசு கிறிஸ்துவால் “நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்'' என்ற கட்டளையைப் பெற்றபோது நான் சபையுடன் இருந்தேன். நான் அங்கே அடையாளம் கண்டு கொள்ளப் படவேண்டும். ''உலகமெங்கும், சர்வ சிருஷ்டிக்கும்'' ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்'' என்பதில் நான் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். நல்லது, இப்பொழுது நீ அதனுடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறாயா அல்லது உனக்கு ஏதோ ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி நேரிட்டு, அதனால் விசுவாசிகளை பின்தொடரும் அடையாளங்களை உன்னால் விசுவாசிக்க முடியாமல் போகிறதா? பாருங்கள், அப்படி உன்னால் முடியாவிட்டால், உனக்கு ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி உள்ளது. பாருங்கள். தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்பதை மறந்துபோய் உள்ளாய். அவர் கூறினார். “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்று நீ அதை மறக்காதே. நீ அதை மறந்து ஒரு கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. நீ அதனுடன் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். 40பரிசுத்த யோவான் 14-வது அதிகாரம், 12-ஆம் வசனத்துடன் நீ அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளை தானும் செய்வான்'' அதை நீ மறக்காதே. நீ அதை மறந்தாயானால், உனக்கு ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி வந்துள்ளது. நீ யாரென்பதை மறந்துபோய் இருக்கிறாய். உன்னுடைய சாட்சி என்ன என்பதை நீ மறந்து போயிருக்கின்றாய். ''நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்ளுவதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்'' என்று அவர் கூறியுள்ளதைப் பற்றி என்ன? அதுதான் உண்மை என்று நீ விசுவாசிக்க அங்கே நீ அடையாளங்கண்டு கொள்ளப்பட்டுள்ளாயா? மாற்கு 11-ல் “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னப்படியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அவன் சொன்னப்படியே ஆகும்'' என்று அவர் கூறியுள்ளார். அது உண்மை என்று நீ விசுவாசிக்க அங்கு நீ அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டுமல்லவா? அப்படி இல்லையென்றால் நீ ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியைப் பெற்றுக் கொள்கிறாய். நீ மறந்து, உன்னுடைய கிறிஸ்தவ சமநிலையை (balance) இழக்கிறாய்? நீ எங்கு சார்ந்தவன் என்று உன்னால் கூற முடியவில்லை. ''நான் மெதோடிஸ்ட்“, “நான் பாப்டிஸ்ட்” அதைக் குறித்துதான் நான் அறிவேன். நான் “பெந்தேகொஸ்தே”. நான் இது, “அது அல்லது வேறொன்று” என்று கூறுகின்றாய். கவனி! அப்படியென்றால் அது அந்த வியாதியின் அறிகுறியாகும். ஏனெனில், நீ ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியை கொண்டிருக்கிறாய் என்று காண்பிக்கின்றது. 41நீ கூறலாம் ''நல்லது, சகோ. பிரான்ஹாமே, நான் இதை விசுவாசிக்கிறேன், ஆதலால் நான் சிறிதளவும்...'' இப்பொழுது ஒரு நிமிடம் பொறு. தேவன் இந்த கடைசி நாட்களில் இக்காரியங்களைச் செய்வார், அது நிகழும் என்று வாக்குரைத்திருக்கையில் உன்னுடைய போதகமானது உன்னை அதிலிருந்து விலக்கி வைத்திருக்குமானால், உன் மேல் அந்த வியாதியின் அடையாளம் இருக்கிறதை என்னால் காண முடிகின்றது என்பதற்கு அது ஒரு நல்ல அறிகுறியாகும். அது ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியாகும். வார்த்தையுடன் உன்னை அடையாளம் கண்டுகொள்ள நீ மறந்துவிட்டாய். ''வியாதியஸ்தர் சுகமாக்கப்படுகிறார்கள் என்று நான் விசுவாசிப்பதில்லை'' என்று நீ கூறலாம். உனக்கு ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி உள்ளது. “பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நான் விசுவாசிப்பதில்லை'' என்று நீ கூறலாம். ஆவிக்குரிய நினைவிழப்பு. 42''கடைசி நாட்களில் தேவன் இதைச் செய்வதாக வாக்களித்துள்ளார் என்று நான் விசுவாசிப்பதில்லை'' என்று நீ கூறலாம். அப்படியானால் வேதத்திற்கு பதிலாக ஒரு போதகத்திற்கோ, அல்லது பிரமாணத்திற்கோ நீ செவி சாய்த்திருக்கிறாய். உனக்கு ஆவிக்குரிய நினைவிழப்பு உள்ளது. ஆகவே நீ எங்கு சார்ந்திருக்கிறாய் என்று உனக்கு தெரியவில்லை. நீ ஒரு “கிறிஸ்தவன்'' என்று அறிக்கை செய்து கொண்டு வார்த்தையை நிராகரிக்கின்றாய். அது சரியாக உன்னை ஆவிக்குரிய நினைவிழப்பிற்கு திரும்பவும் கொண்டு வரும். பாருங்கள், உனக்கு ஆவிக்குரிய நினைவிழப்பு வந்துள்ளது. நீ உன்னை வேத வாக்கியங்களுடன் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. நீ சீஷர்களுடன் இருக்கத்தான் வேண்டும். எல்லா வேத வாக்கியங்களுடனும், கட்டளை பெற்றபொழுது இருந்த சபையுடனும் நீ நிற்கத்தான் வேண்டும். ''நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்; விசுவாசிக்கிறவர்களை இவ்வடையாளங்கள் பின் தொடரும். அதுதான் அவள் (சபை - தமிழாக்கியோன்) பெற்ற கட்டளை ஆகும். இப்பொழுது அவர்கள்... அதுதான் அந்த கட்டளை. ஆனால் ஆவிக்குரிய நினைவிழப்பு வியாதியின் மோசமான நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். ஒரு நாள் தோட்டத்தில் ஏவாள் அடைந்தது போல. இப்பொழுது அவள் (சபை - தமிழாக்கியோன்) இஸ்ரவேலைப் போல இதே வியாதியினால் அவதியுறுகிறாள். வேதாகமக் கல்லூரி ஆகாரத்தால் அவள் உடலில் அயற்பொருள் நுழைந்து (அலர்ஜி) (allergy) உனக்கு ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியை அளிக்கிறது. வேதாகமக் கல்லூரி ஆகாரத்தை நீ உண்டால் உனக்கு அலர்ஜி (உடலில் அயற் பொருள் நுழைதல்) உண்டாகும். அதன் பிறகு முதலாவது காரியம் என்ன தெரியுமா? நினைவிழப்பின் வியாதியை (Spiritual amnesia) அடைந்து மோசமான நிலைக்குள்ளாவாய். வேதாகமம் கூறும் எதையும் நீ விசுவாசிக்கமாட்டாய். 43இன்றைக்கு சபை இப்படி இருப்பதற்கு இதுதான் காரணம். நாம் ஒரு எழுப்புதலை அடையாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். மக்கள் இப்படி இருப்பதற்கு இது தான் காரணம். எது சரி, எது தவறு என்று அறியமுடியாத அளவிற்கு ஒவ்வொரு போதகமும் அனல் தழலிலே வைத்து பொறிக்கப்பட்டு மக்களை போதையுறச் செய்கிறது. சரியாக. அவள் தன் கர்த்தரை நினைவில் கொள்ளாமல் இருக்கிறாள். அவள் அவருடைய வார்த்தையை, அவருடைய வாக்குத்தத்தத்தை ஞாபகம் கொள்ளாமல் இருக்கிறாள். இயேசு காட்சியில் தோன்றினபோது இஸ்ரவேலும் இப்படித்தான் இருந்தது. ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்பதை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ''உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவார்'' என்று மோசே கூறினதையும் அவர்கள் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர்கள் ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியைக் கொண்டிருந்தனர். 44அதே காரியத்தைத்தான் இன்று சபையும் கொண்டுள்ளது. ''கடைசி நாட்களில் இவை நடக்கும்'' என்று அவர் கூறியிருக்க, இந்த காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க, அதை நாம் காண்கையில் சபையானது கடிகாரத்தில் பன்னிரண்டு மணி போன்று செத்ததாய் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறது. அது என்ன? ஆவிக்குரிய நினைவிழப்பு. நாம் நம்மை பெந்தேகொஸ்தே என அழைத்துக் கொண்டு வார்த்தையானது உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையினால் பிரசங்கிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், அதனுடன் நம்மை அடையாளம் கண்டுகொள்ள முடியாதவர்களாய் இருக்கிறோம். அவர் இங்கு நம் மத்தியில் இருந்து நான் செய்வேன் என்று கூறின அதே காரியத்தை சரியாக நடப்பித்துக் கொண்டு வருகிறார். கவனி, நம்முடைய ஸ்தாபன அமைப்புகளோ ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியை அடைந்திருக்கின்றன. நாம் துன்புறுகிறோம். நாம் எதைச் சார்ந்தவர்கள் என நமக்குத் தெரியவில்லை. ஒருவன் தன்னுடைய காகிதங்களை எடுத்துக் கொண்டு இந்த சபையிலிருந்து அந்த சபைக்கு, இந்த சபை, இந்த கொள்கை, அந்த கொள்கை என்று போகிறான். பாருங்கள்? மறுபடியுமாக நமக்குரிய தேவை என்னவெனில், மற்றுமொரு ஆமோஸ் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் காட்சியில் வரவேண்டியதுதான். நாம் அவனை வரவேற்போமா? அவர்கள் செய்தது போல. அவர்கள் அவனை வரவேற்கவில்லை; இன்றைக்கும் அவனை வரவேற்கமாட்டார்கள். பிரசங்கம் செய்ய அவன் தலையை நுழைக்கக் கூட அவனுக்கு இடம் கிடைக்காது. இப்பொழுது அது முற்றிலும் சரியானதுதான். ஏனெனில் சபையானது ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியினால் துன்புறுகிறது. 45இப்பொழுது, ஏன் லூக்கா 17-ஆம் அதிகாரத்தில் மனுஷ குமாரன் வெளிப்படும்போது “சோதோமின் நாட்களில் அடையாளங்கள் நடந்தது போல மறுபடியும் நடக்கும்'' என்று தேவன் இந்த கடைசி நாட்களில் வாக்குரைத்திருக்கிறார். அது நடைபெறுவதை மக்கள் காண்கிறார்கள். சிலர் அதை விசுவாசிக்கவும் கூடச் செய்வதில்லை. அது மனோதத்துவம், பிசாசின் ஆவி என்று நினைக்கின்றனர். ஏன்? அது என்ன? அவர்கள் ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியால் அவதியுறுகின்றனர். அது சரி. ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்“ என்பதையும், கர்த்தரையும் அவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. அப்போது அவர் என்னவாயிருந்தாரோ, இப்பொழுதும் அப்படித்தான் இருக்கிறார். ஆனால் என்ன நேர்ந்தது? இன்னுமாய் நம்மை நாமே வார்த்தையில் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஏன்? அவள் (சபை - தமிழாக்கியோன்) ஒரு விடுதியா அல்லது அவள் ஒரு சபையா என்று அவளுக்குத் தெரியவில்லை. ஒரு விடுதி என்று அழைக்கப்பட அவள் விரும்பவில்லை. அவள் ஒரு சபையென்றும் அழைக்கப்பட முடியாது; ஏனென்றால் சபையென்று அழைக்கப்பட்டால் அவள் கிறிஸ்துவுடன் அடையாளம் கண்டு கொள்ளப்படுதலாகும். இல்லையெனில் அது அவளுக்கு ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியை அளிக்கிறது. அவளை ஒரு விடுதியென அழைக்கப்பட அவளுக்கு விருப்பமில்லை. ஆகவே அது பெந்தேகொஸ்தே சபை, மெதோடிஸ்டு சபை, பாப்டிஸ்டு சபை அல்லவே அல்ல; அது பெந்தேகொஸ்தே விடுதி, மெத்தோடிஸ்ட் விடுதி, பாப்டிஸ்ட் விடுதி ஆகும். ஏனெனில் அவள் வார்த்தையுடன் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. வார்த்தையானது தம்மைத்தாமே வெளிப்படுத்தும்போது அதை அவர்கள் விசுவாசிப்பதில்லை. அது ஒரு வியாதி, ஆவிக்குரிய நினைவிழப்பு. தங்களை தாங்களே அடையாளம் கண்டு கொள்ளாமல் உள்ளனர்; எதைச் சார்ந்தவர்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அது சரி. 46அது கலப்பு வீரியமாக ஏதோ இனப்பெருக்கம் (hybreeding) அடிக்கடி செய்வது போலாகும். ''நான் பார்த்ததிலேயே மிகவும் மந்தமான ஒரு மிருகம் கோவேறு கழுதையாகும் என்று நான் எப்பொழுதும் நினைப்பதுண்டு'' என்று நான் அடிக்கடி கூறுவது போல. பாருங்கள். அது ஒரு கலப்பின மிருகமாகும். அதனுடைய தாய் ஒரு குதிரை, தந்தை கழுதையாகும், ஆகவே அது எதைச் சார்ந்த ஒன்று என்றுகூட அதற்கு தெரியாது. நீங்கள் முதலாவதாக இவைகளை சேர்த்து ஒரு கழுதையைப் பெறலாம். பிறகு அல்லது ஒரு கோவேறு கழுதையைப் பெறலாம். ஆனால் கோவேறு கழுதையினால் திரும்பவுமாக இனப்பெருக்கம் செய்ய இயலாது. பாருங்கள், அதனால் முடியாது. அதற்கு நீங்கள் ஒன்றுமே கற்றுக் கொடுக்க முடியாது. அது கற்றுக் கொள்ள இயலாத ஒன்று (hard headed) அதனிடம் நீ ஒன்றும் கூற முடியாது. அதற்கு நீ பெரிய நீண்ட காதுகளை அமைக்கலாம். அது தன்னுடைய ஒரு நீண்ட நாளிலே, சாகும் முன்னர் உன்னை உதைக்காமல் விடாது. அதுதான். முடியுமானால், உன் மேல் பாயத்தக்கதாக அது காத்துக்கொண்டே இருக்கும். 47இந்த காரியம் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற நிறைய கலப்பின கிறிஸ்தவர்களைத்தான் என் நினைவில் கொண்டு வருகிறது. ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியை அவர்கள் அடையும் வரை சபையை கலப்பினம் செய்கிறார்கள். அவர்களால் மறுபடியும் மற்றொரு காரியத்தை பிறப்பிக்க முடியாது. கலப்பின சோளப்பயிரை பற்றி அவர்கள் பேசுகிறார்கள். கலப்பின சோளப்பயிர் (corn) ஒன்றுமல்ல. அது உங்கள் வாயில் போடக் கூடிய எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் மோசமான ஒன்றாகும். இதன் காரணத்தால்தான், நீங்கள் இச்சிறிய, செடிகள் விரைவாக வளர்ச்சியுறும்படி மக்கிப் புளித்த எருப்படுகையால் வெது வெதுப்பாக்கப்பட்டுக் கண்ணாடியில் மூடப்பட்ட பாத்தி செடிகளையும் (hot bed plants) கலப்பின பொருட்களையும் எடுத்து, அதன் மேல் தெளித்து, அதை பக்குவப்படுத்தி வளர்க்கிறீர்கள். ஏன்? ஏனென்றால் பூச்சிகள் தங்களை அண்டவிடாமல் அவைகளாலே காத்துக் கொள்ள முடியாமல் உள்ள காரணத்தால் தான். ஆனால் ஒரு உண்மையான, தூய இன மரபைச் சேர்ந்த ஒன்றிற்கு தடுப்பு மருந்தை நீ போடத் தேவை இல்லை. பூச்சிகள் தங்களை அண்டாதவண்ணம் தடுக்கும் வல்லமை அதற்குள்ளேயே இருக்கிறது. ஆகவே, அது ஒரு உண்மையான பரிசுத்த ஆவியைப் பெற்ற மனிதனை அவிசுவாச பூச்சிகள் தொடாதபடிக்கு செய்கிறது. 48ஒரு வயதான கோவேறு கழுதையிடம் நீங்கள் சென்று, ''பையா, நீ இதை, அதை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். அது உட்கார்ந்து, “ஹா! ஹா! ஹா!'' என்று கத்தும். அதன் காதுகள் மேலும் கீழும் ஆடும். இதைப் போன்று கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் அநேகர் செய்வதை நான் கண்டிருக்கிறேன். ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்'' என்று நீங்கள் கூறினால்... ''அஹ்? அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன என்று நான் விசுவாசிக்கிறேன். அஹ்? அஹ்? அஹ்“. பாருங்கள். அவன் என்ன விசுவாசிக்கிறான் என்பதே அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு எதுவும் தெரியாது. அவன் எங்கிருந்து வந்தவன் என்றும்; எங்கே போகிறான் என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. அவனுக்கு குதிரையின் நினைவிழப்பு (horse amnesia) உள்ளது. அவனுக்கு எங்கிருந்து வந்தோம் என்பதே தெரியவில்லை. ஆதலால் அவன் இன்னுமாய் முன் செல்ல இயலாது. 49ஆனால் தூய இனமரபைச் சார்ந்த (thorough bred) ஒன்று தான் எனக்கு பிடிக்கும். ஓ, அவன் மிருதுவானவன். அவனிடம் நீ பேசமுடியும். தன்னுடைய தந்தை, தாய், தாத்தா, பாட்டி யாரென்பதும் அவனுக்குத் தெரியும். தான் எங்கிருந்து வருபவன் என்பதைக் காண்பிக்க அவனிடம் மரபு கால வழி அட்டவணை (pedigreed papers) காகிதங்கள் உள்ளன. ஒரு மரபு கால அட்டவணையைக் கொண்டிருந்து, தேவனுடைய வார்த்தைக்கு முற்றிலுமாக திருப்பி, பெந்தேகொஸ்தே நாளிலே, பரிசுத்த ஆவியானவர் மேலே இறங்கிய பரிசுத்தவான்களை எனக்கு பிடிக்கும். அது ஒரு மரபு கால அட்டவணையை (pedigreed) உடைய கிறிஸ்தவன். அவன் எங்கிருந்து வருபவன் என்பதை அவன் அறிவான். அவன் மெத்தொடிஸ்ட், பாப்டிஸ்ட் அல்லது வேறெதுவுடனும் அடையாளம் கண்டு கொள்ளப்படமாட்டான். அவன் தேவனுடைய வார்த்தையில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறான். அவன் சரியாக எங்கு நிற்கின்றான் என்பதை அறிவான். தன்னுடைய பிதாவினுடைய; இயேசு கிறிஸ்துவினுடைய ராஜரீக ரத்தமானது அவனுக்குள் பாய்கிறது. அது என்ன செய்கிறதென்பது அவனுக்குத் தெரியும். அவன் ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிப்பான். தேவன் அவனுக்குள்ளே கிரியை செய்து, தான் செய்வேன் என்று வாக்குரைத்ததை அடையாளங்கள் மூலம் உறுதிப்படுத்துகிறார். ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி அவனுக்கு கிடையாது. அவன் ஒரு தூய இனமரபைச் சேர்ந்தவன் (thoroughbred). எனக்கு அது பிடிக்கும். 50ஆனால் சபை இன்று ஆவிக்குரிய நினைவிழப்பு வியாதியின் மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. அது எதைச் சார்ந்தது என்பது அதற்கு தெரியாது. எது ஒரு சபையை உருவாக்குகிறது என்ற எல்லாவற்றையும் அது மறந்துபோய் உள்ளது. இன்றைக்கு எது நம்மை மிகவும் ஐசுவரியம் நிரம்பியவர்களாய் ஆக்கியுள்ளது? இஸ்ரவேல் ஐசுவரியம் பொருந்திய ஸ்தாபனத்தில் எப்படி இருந்ததோ, அதைப்போன்று அந்த ஸ்தானத்திற்கு லவோதிக்கேயா திரும்பிச் சென்றுள்ளது. அது ஏழ்மையாய் இருந்த போது அது செய்யக்கூடிய எல்லாவற்றிற்கும், அது பெற்ற எல்லாவற்றிற்கும் அது தேவனை நம்பினது; ஆகவே தேவன் அதனோடிருந்தார்; அது ஆவிக்குரியதாய் இருந்து, முன்னேறியது. ஆனால் அது ஐசுவரியத்தை அடைந்தபோதோ, இக்காரியங்கள் நடைபெற்றது; அவர்களுடைய பட்டினங்கள் கட்டப்பட்டு எழும்பிற்று. அவர்களுடைய ஸ்திரீகள் சீர்கெட்டுப் போனார்கள். அவர்களுடைய ஆண்கள் அதை அனுமதித்தார்கள். அவர்களுடைய பிரசங்கிகள் அவர்களை கீழ்த்தரத்தில் விட்டு விட்டு தீர்க்கதரிசிகளை வெளிப்படையாக கண்டனம் செய்தனர். பிறகு அந்நிலைமை போன்ற ஒன்றினுள் அவர்கள் உள் சென்றனர். எது அதைப் பிறப்பித்தது? அவர்களுக்கு ஆசீர்வாதங்கள் எங்கிருந்து வந்தன என்பதை அவர்கள் மறந்ததே, அதைப் பிறப்பித்தது. மெத்தோடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே! மெதோடிஸ்டுகளாகிய நீங்கள் ஜான் வெஸ்லியை நினைவு கூறலாம். பாப்டிஸ்டுகளே! ஜான் ஸ்மித் ஜனங்களின் நிலைமையை நினைத்து அழுது ஜெபித்தார். அவருடைய மனைவி அவரை மேஜைக்கு அழைத்து செல்லும் அளவிற்கு அவர் இரவெல்லாம் அழுது ஜெபித்ததால் அவருடைய கண்கள் வீங்கி மூடிக் கொண்டன. என்ன காரணம்? ஜான் வெஸ்லி கூறின மகத்தான காரியங்களில் ஒன்று... முந்தைய மெத்தோடிஸ்டு பிதாக்களில் ஒருவர், ''மெத்தோடிஸ்டு சபையின் குமாரத்திகளின் அவமானம் என்னவென்றால், அவர்கள் மிகவும் உலகப் பிரகாரமாக ஆனதால், அவர்கள் தங்கள் விரல்களில் மோதிரங்களை அணிந்துள்ளனர்'' என்று கூறினார் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது உள்ள குட்டைக்கால் சட்டைகளை கண்டால் அவர் என்ன சொல்வார்? என்ன நடந்தது? ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி. சரியாக அதுதான். நீ எங்கிருந்து வந்துள்ளாய் என்பதை மறந்து போனாய். உனக்கு இவ்வெல்லாக் காரியங்களும் உள்ளன. ஏனென்றால் தேவனுடைய இரக்கம், நற்குணம் இதை உனக்குச் செய்தது. 51இது வினோதமாய் உள்ளதே என்று நீ எண்ணுகிறாயா? இது, இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியிலும், தீர்க்கதரிசனத்திலும் சரியாக உள்ளது. வெளிப்படுத்தின விசேஷம் 3-ஆம் அதிகாரத்தில் “நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல் நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்'' என்று கூறப்பட்டுள்ளது. பாருங்கள்? நீ அதை அறியாமலிருக்கிறாய்? அது என்ன? ஆவிக்குரிய நினைவிழப்பு. அதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். சபைகள் இன்று பணத்தை பெற்றுள்ளன. தேசத்திலே ஒரு ஸ்தாபன சபையும் கூட லட்சக்கணக்கான, லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பு மிக்கதாய் இல்லாமல் இல்லை. லட்சக்கணக்கான, லட்சக்கணக்கான டாலர் செலவில் கட்டிடங்களையும் மற்ற காரியங்களையும் கட்டி, தேவனுடைய வருகை சமீபமாய் இருக்கிறது என்று சபைகள் பிரசங்கிக்கின்றன. “ஐசுவரியவானென்றும் எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறப்படியால் அவர்கள் கொண்டிருப்பதைக் காட்டிலும் சிறந்த கல்வியையுடைய பிரசங்கிகளையும், அவர்கள் அறிந்திருப்பதை காட்டிலும் அதிக வேத கல்வி அறிவை உடையவர்களையும் பட்டினத்திலே தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இடங்களில் பெரிய கட்டிடங்களை உடையவர்களாயும், இருக்கின்றனர். அவர்கள் விரும்பும் எந்த காரியத்தையும் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. ஆகவே அவர்கள் என்ன செய்தனர்? ஆவிக்குரிய நினைவிழப்பைப் பெற்று, இஸ்ரவேலுக்கு செய்தது போல, தேவன் தான் அவர்களுக்கு இவைகளைச் செய்தார் என்பதை மறந்து போனார்கள். 52இயேசு கிறிஸ்து தம்முடைய தூதனை யோவானிடத்திற்கு அனுப்பி, இந்த கடைசி கால சபை இந்த ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியை பெற்றிருக்கும் என்று கூறினார். வேதாகமும் இவைகளை தீர்க்கதரிசனமாக உரைத்தது. அவர்கள் தரித்திரர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தாங்கள் பெரியவர்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் எதையோ பெற்றுள்ளனர் என்று நினைக்கின்றனர். ஆனால் அவரோ அவர்கள் “நிர்பாக்கியமுள்ளவர்களும், பரிதபிக்கப்படத் தக்கவர்களும், தரித்திரரும், குருடரும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல் இருக்கிறார்கள்'' என்று கூறுகின்றார். அவர்களுடைய நிலைமையை அவர்களிடம் எடுத்துச் சொல்ல ஒரு வழியும் இல்லை. இப்பொழுது, வெட்கக்கேடான நிலையில் உள்ள ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ தெருக்களில் நிர்வாணமாகவும் குருடாகவும் இருந்தால், அது காண்பதற்கு ஒரு பரிதாபமான நிலைமையாய் இருக்கும். ஆனால் அவர்கள் சரியான மனநிலைமையை உடையவர்களாய் இருந்து, தாங்கள் யார் என்றும், தாங்கள் மனிதர்கள், தாங்கள் ஆடைகளை அணிய வேண்டுமென்றும் அறிந்து, மனித இனத்துடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டுமென்று இருக்கும்போது; அங்கு “நிர்பாக்கியமுள்ளவனும் பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும் குருடனும், நிர்வாணியுமாயிருக்கையில்” நல்லது நீ அவனிடம் சென்று சகோதரனே நீ நிர்வாணியாயிருக்கிறாய் என்று கூறுவாயானால்... ''இப்பொழுது பார்! நான் டாக்டர் இன்னார் - இன்னார் நீ போய் உன் வேலையைப் பார், நான் இதை - இதைச் சேர்ந்தவன்; நான் உனக்குச் சொல்கிறேன்! உனக்கு வேலையே இல்லையா? பரிசுத்த உருளையனே, எனக்கு ஒன்றும் கூறத் தேவையில்லை!“ (ஒலி நாடாவில் காலி இடம் -ஆசி). ''ஒரு மனிதன் இதைச் செய்வது தவறு; ஜனங்கள் செய்கின்ற இக்காரியங்கள் தவறு'' என்று அவர்களிடம் சொல்லுங்கள். 53அதற்கு அவர்கள் தங்கள் பிரசங்கி எவ்வளவு பரந்த மனப்பான்மையை உள்ள ஒருவர் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவார்கள். பாருங்கள்? அது என்ன? அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் கட்டளைகளை மறந்து விட்டார்கள். அவர் வந்து, தான் செய்வேன் என்று கூறின அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வாரானால், அதை விசுவாசிக்க அவர்களுக்கு விருப்பமில்லை. அது ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி. பாருங்கள். அவர்கள் மறந்து விட்டனர். அவர்கள் நிர்வாணியாயிருந்து அதை உணராமல், அறியாமல் உள்ளனர். “நான் சபையைச் சேர்ந்தவனாயிருப்பதால் அதெல்லாம் தேவை'' என்று நினைக்கின்றனர். ஓ, சகோதரனே, அப்படியென்றால் தேவனுடைய பார்வையில் ஒரு பிறப்புணர்ச்சியுடன் உதவி செய்து கொள்ளும் அது ஒரு கழகமாகவும் (mason) ஏதாவதொன்றாகவும், அல்லது ஏதாவது ஒரு விடுதியாகவுமே அன்றி வேறெதுவுமாக காணப்படாது. ஒரு சபையை மாத்திரம் சேர்ந்துகொண்டால், தேவனுக்கு அது ஒன்றுமே இல்லை. நீங்கள் தேவனுக்கு குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்க வேண்டும். நீ தேவனால் பிறந்தவனாய் இருக்கவேண்டும். வார்த்தை தான் தேவன். என் தந்தையின் ஒரு பாகமாக நான் ஆகும் போது, என் தந்தையின் முழுமையாக நான் ஆகிறேன். நீ தேவனின் ஒரு பாகமாக ஆனால், நீ தேவனின் முழுமையாக ஆகின்றாய். அவருடைய முழு வார்த்தையையும், எல்லாவற்றையும் விசுவாசி. ஆவிக்குரிய நினைவிழப்பு. 54உன்னுடைய பெயர் என்னவென்றும் உனக்குத் தெரியாமல் போகும் பட்சத்தில் உனக்கு எப்படி இருக்கும்? நீ ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாய் இருக்கையில், அப்படி இருந்தாய் என்று நான் நம்புகிறேன், நீ அருமையான மக்களை உடைய ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வரும்போது, அக்குடும்பத்தின் பெயரை நீ மறந்து, அங்கு வெளியில் சென்று, வெட்கக்கேடான (disgraceful) விதத்தில் வாழ்வது என்னவாயிருக்கிறது? அவர்கள் ''உன்னுடைய பெயர் ஜோன்ஸ் அல்லவா'' வேறெதுவோ என்று கேட்கும்போது, ''நல்லது நான் யார் என்பது எனக்கே தெரியவில்லை. பாருங்கள்? அது சரி. அது இருப்பதிலேயே மோசமான காரியம். அது மோசமான ஒரு நிலையை அடைவதாகும். நல்லது. இந்நிலைமையைத் தான் சபையானது அடைந்திருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதித்துவமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அதை மறந்து போனது. ஏனென்றால் வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக அதினுள் ஸ்தாபனங்களையும், பிரமாணங்களையும் செலுத்திவிட்டார்கள். ''அவர்கள் நிர்வாணியும் குருடரும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருந்து அதை அறியாமலிருக்கின்றார்கள்'' என்று அவர்களிடம் கூறுவதற்கு வழியே இல்லை. நான் மறுபடியும் பர்மிங்ஹாமில் இருக்கமாட்டேன். ஆகையால் இந்த ஒரு முறைதான் அவர்கள் அதைக் கேட்க முடியும். பாருங்கள்? பாருங்கள்? சரி. நான் ஒரு விதையை விதைப்பது தவிர வேறு எதற்கும் நான் பொறுப்பாளி அல்ல. அது எந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என்பதை தேவன் வழி நடத்துவார். 55ஆம், அவர்கள் வார்த்தையின் வாக்குத்தத்தத்தை மறந்து போயினர். அவர்கள் மறந்தனர். இயேசு வந்தபோது இஸ்ரவேலானது அத்தகைய குழப்பத்தில் இருந்தது. அது மறந்து போனது. ஓ, மேசியா வரப்போகிறார் என்று விசுவாசிப்பதாக கூறி அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மேசியா வந்து தன்னை வார்த்தையினாலே அடையாளம் காண்பித்தபோது, அவர்கள் தேவனுடைய வார்த்தையை அவமாக்கும் அளவிற்கு அவர்களிடம் அநேக பாரம்பரியங்கள் இருந்தன. கடைசி மணி நேரத்திற்கு முன்பு “சோதோமின் நாட்களில் இருந்தது போல இருக்கும்'' என்று இயேசு வாக்குரைத்திருக்கிறார். அது அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டியதாயிருக்கின்றது. மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆவிக்குரிய நினைவிழப்பு - சரியாக ஆவிக்குரிய நினைவிழப்பு தான். பாருங்கள். இக்காரியங்களை அவர்கள் மறந்துவிட்டனர். ”ஓ, நான் இதைச் சார்ந்தவன். நான் இதை செய்தேன். நான் ஆவியில் நடனமாடி இதை செய்தேன்.'' நல்லது, என்னே, அதனுடன் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. 56நீ எப்படி ஒரு கிறிஸ்தவனாயிருந்து வார்த்தையை மறுதலிக்க முடியும்? அவ்வாறு நீ செய்ய முடியாது. தேவன் தான் அந்த வார்த்தை. வார்த்தை உன்னில் இருந்தால் நீயும் வார்த்தையும் ஒன்றுதான். எதெல்லாம் வார்த்தையோ அது நீ தான். ஆமென். நான் இந்த சந்ததியில் ஜீவிப்பேனானால், இந்த சந்ததிக்கு இந்த வார்த்தையின் பாகம் என்ன வாக்குரைத்திருக்கின்றதோ, நான் அதுவாகத்தான் இருத்தல் வேண்டும். நான் ஒரு கிறிஸ்தவனாயிருப்பேனானால் வேதம் எதையெல்லாம் போதித்து, எதற்காக நிற்கின்றதோ அவை எல்லாவற்றிலும் நான் அடையாளம் கண்டுகொள்ளப்பட வேண்டும். அல்லேலுயா! என்னை ஒரு பரிசுத்த உருளையன் என்று கூறப் போகின்றாய். நீ எப்படியாயினும், சரியாக இப்பொழுது நான் பக்தி வசப்படுகிறேன். ஆம், ஐயா. வேதம் என்னென்ன வலியுறுத்திக் கூறுகின்றதோ அதனுடன் நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும். அது வலியுறுத்திக் கூறுகின்றது. ஆகையால், நான் இந்த நவீன நாட்களில் ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதியினால் பீடிக்கப்படாமலிருந்தால், நான் அதனுடன் (வார்த்தையுடன் - தமிழாக்கியோன்) அடையாளம் கண்டு கொள்ளப்படுவேன், கண்டு கொள்ளப்பட முடியும். நான் அதை மறுதலித்தால், எனக்கு ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி உள்ளது. ஏதோ ஒன்று நடந்துள்ளது; நான் ஒரு பிரமாணத்தையோ, அல்லது ஒரு போதகத்தையோ, அல்லது சில சபையையோ, அல்லது ஒரு கூட்ட மனிதரையோ நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். வார்த்தை வந்து தன்னை அடையாளம் காண்பித்தாலும் கூட, என்னால் செய்யமுடியாது. இதன் காரணமாகத்தான் இயேசு அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. அவர்கள் தங்கள் ஆசாரியரைக் குறித்து, ''ஓ, நல்லது இந்த மனிதன் பரிசுத்தமுள்ளவர், நம்முடைய பரிசுத்த ஆசாரியன், நம்முடைய பரிசுத்த இவர்“ என்றனர். ஆகவே, நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள், அவனுடைய கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்“ என்று இயேசு கூறினார். 57காயீன் ஒரு நல்ல பலியை படைத்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவன் நேர்மையாக இருந்தவன். ஒரு பலிபீடத்தை கட்டி, முழங்காலிட்டு, தொழுது, பலியை படைத்து தேவனிடம் ஜெபம் செய்தான். அப்படியானால், நீ ஒரு சபையை சேர்ந்து, ஒரு பீடத்தை வைத்து, உன்னுடைய தசம பாகத்தை செலுத்தி, சபைக்குச் சென்று, ஒரு நல்ல ஜீவியம் செய்வது மாத்திரமே தேவனுக்கு தேவை என்றால், அவர் காயீனை கடிந்து கொண்டது அநீதியாக இருக்குமே. ஏனெனில் அவன் அதே காரியத்தை தானே செய்தான். ஆம் ஐயா, அதேதான். ஆனால் மதம் என்பது ஒரு “போர்வையே.'' ஆகவே உன்னுடைய நல்ல கிரியைகளினாலே நீ மூடப்பட முடியாது. ஒரே ஒரு காரியத்தைத்தான் தேவன் ஏற்றுக் கொள்வார், அதுதான் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தமாகும். அதுதான் உண்மையான போர்வையாகும். அதற்கு வெளியில், ''பிரமாணத்தை வைத்திரு” என்று கூறுவாயானால், ஆவிக்குரிய நினைவிழப்பு! அதுதான் சம்பவித்தது. இப்பொழுது கவனி, அவர்கள் அவர்களுடைய வார்த்தையை மறந்துவிட்டனர். வேதத்தை மறந்துவிட்டனர். வாக்குத்தத்தத்தை மறந்தனர். மெத்தோடிஸ்ட் எப்படியிருந்தனரோ பாப்டிஸ்டு அல்லது வேறொருவர் எப்படியிருந்தனரோ, அந்த பளப்பளப்பில் (glare) வாழ முயல்கின்றனர். இந்நாளின் வாக்குத்தத்தம் இங்கே உள்ளது. தேவன் அதை தம் வார்த்தையின் மூலம் பேசி, மறுபடியுமாக உறுதிப்படுத்தி அது அப்படித்தான் என்பதை நிரூபிக்கிறார். ஆனாலும் இன்னுமாய் அதை அவர்கள் விசுவாசிப்பதில்லை. ஆவிக்குரிய நினைவிழப்பு! சரியாக அதேதான். அது முற்றிலும் சரி. முற்றிலும் நினைவிழப்பு வியாதியஸ்தர்கள் (amnesia) முற்றிலுமாக அதை விசுவாசிப்பதில்லை. 58ஒரு பிரெஞ்ச் (French) போர் வீரன்... எனக்கு ஒரு சிறுகதை கூறப்பட்டது. நாம் முடிப்பதற்கு முன்பாக, இவ்வளவு நேரமாகும் என்பது எனக்கு தெரியாது. இன்னும் 10 பக்க குறிப்பு என்னிடம் மீதம் உள்ளது. மற்றொரு சமயம் நாம் அதைப் பார்ப்போம். கவனியுங்கள், ஒரு பிரெஞ்ச் போர் வீரன். இந்த நினைவிழப்பு வியாதியை கொண்ட போர்வீரர் குழுவை சேனையிலிருந்து பிரித்தனர். அது (நினைவிழப்பு வியாதி - தமிழாக்கியோன்) போரின்போது ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக இருந்தது. ஆகையால் அவர்கள் ஒரு திட்டத்தை வைத்திருந்தனர். அவர்கள் (போர் வீரர் - தமிழாக்கியோன்) நேசித்த மக்களை வரவழைத்து இவர்களை (நேசித்த மக்களை - தமிழாக்கியோன்) அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடிகின்றதா என்று பார்ப்பார்கள். ஒன்று அல்லது இரண்டு பேர் அடையாளம் கண்டு கொள்வார்கள், மற்றவர்களுக்கோ நம்பிக்கை (சுகமடைதல் - தமிழாக்கியோன்) கிடையாது. ஆகவே பிறகு மற்ற எல்லோரையும் நல்வாழ்விடத்தில் (Sanitarium) அழைத்துச் செல்வார்கள். வாழ்நாள் முழுவதையும் அங்கு தான் அவர்கள் கழிக்க வேண்டும். இரயில் வண்டியில் அவர்கள் மலையின் மேல் சென்று கொண்டிருந்தனர்; ஒரு இரயில் நிலையத்தில் நின்று, இப்பையன்களை தங்கள் கால்களை தளர விடுவதற்காக அவர்களை வெளியே விட்டனர். காவலாளிகள் அந்த மலையின் மேல் இறங்கி அவர்களை கவனித்தனர். அவர்களை கவனித்துக் கொள்ளவேண்டும். ஏனென்றால் அவர்கள் நினைவிழப்பின் வியாதியைக் கொண்டவர்களாவர். 59அங்கிருந்த ஒரு வாலிபனை அவர்கள் கவனித்தனர். அவன் வெளியே வந்து அந்த தண்ணீர் தொட்டியை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். மலை முழுவதும் அவன் சுற்றி நோக்கினான். தன் முகத்தை தேய்த்துக் கொண்டு ஆழ்ந்து ஆராய்ந்தான். அவன் மறுபடியும் அந்த தண்ணீர் தொட்டியைப் பார்த்தான். இரயில் நிலையத்தை முழுவதும் சுற்றி நோக்கி, நடக்க ஆரம்பித்தான். காவலாளி அவனைத் தடுப்பதற்கு பதிலாக அவனைப் பின்தொடர்ந்தான். அவன் மலையின் மேல் ஏறி, ஒரு சிறிய பாதையின் வழியாகச் சென்று, வலது புறமாக திரும்பி, வேறொரு மலையின் மேல் ஏறி, ஒரு சிறிய மரத்தாலான அறையில் வந்தான். அவன் பார்த்தான். அந்த நுழைவாயிலில் இருந்து கையில் கொம்பை வைத்திருந்த ஒரு வயதான மனிதன் வந்து, அவனைக் கட்டிப்பிடித்து ''என் மகனே, நீ திரும்ப வருவாய் என்பது எனக்குத் தெரியும். நீ இறந்து போனாய் என்று அவர்கள் கூறினர். ஆனால் திரும்ப வருவாய் என்று எனக்குத் தெரியும்“ என்றார். அந்தப் பையன் சுய நிலையை அடைந்தான். அவனுடைய நினைவிழப்பு வியாதி அவனை விட்டு அகன்றது. தன் தந்தையை அவன் அறிந்து, அவரை அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. 60கடின பயிற்சியின் மூலம், ஸ்தாபனங்களாலும், பிரமாணங்களாலும், உலகக் காரியங்களாலும் மிகவும் அதிர்வுகளுக்குள்ளான ஓ! சிலுவையின் போர் வீரனே, நீ சில நிமிடங்கள் வெளியே வந்து, என் நீ வேதத்தைச் சுற்றிப் பார்க்கக் கூடாது? நீ அங்குமிங்கும் சுற்ற நேரிடலாம். இந்நாட்கள் ஒன்றில் நீ ஒரு விசுவாசியாக இங்கே வார்த்தையில் உன்னை நீயே அடையாளம் கண்டு கொள்ளலாம். நீ அவரை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். நீ சுய நினைவை அடைந்து, கெட்ட குமாரன் செய்தது போல, உன்னைதானே கண்டு கொள்ளக் கூடும். தேவனுடைய வார்த்தைகளினாலே நீ உன் அடையாளத் தன்மைகளை கண்டு கொள்ளக் கூடும். சில காலத்திற்கு முன்பு, மற்றொரு நாளிலே, யாரோ ஒருவர், ''ஆனால் சகோ. பிரான்ஹாமே, பெந்தேகொஸ்தே மக்களாகிய எங்களைப் பாருங்கள், என்ன அருமையான சபைகளை நாங்கள் கொண்டுள்ளோம். ஏன், பயிற்சி பெற்ற ஊழியக்காரர்களை நாங்கள் வைத்திருக்கிறோமே'' என்று கூறினார். கவனி. மனிதன் ஒரு மனைவியை மணம் செய்யும் போது, அவளுடைய அழகை அவன் நம்புவதில்லை. இல்லை. அவன் அவளுடைய விசுவாசத்தின் ஆணையுறுதியை, அவளுடைய வார்த்தையை நம்புகிறான். அவளுடைய அழகை அவன் நம்புவதில்லை, அவளுடைய உண்மைத்துவத்தை, விசுவாசத்தையே நம்புகிறான். அதே போன்றுதான் நீ தேவனை மணக்கும் போதும், நீ கட்டுகின்ற அழகான பெரிய சபையிலே நீ நம்பிக்கை வைப்பதில்லை. ஆனால் நான்தான் “நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்” என்று இயேசுகிறிஸ்து உரைத்த வாக்குத்தத்தத்தில் தான் உன் நம்பிக்கையை வைக்கின்றாய். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (சபையோர் - ''ஆமென்'' என்கின்றனர் -ஆசி) சற்று நேரம் தலைகளை தாழ்த்துவோம். 61இன்றிரவு, இக்கட்டிடத்தில் அமர்ந்திருக்கும் மக்கள், ஆண்களும், பெண்களுமாக, நித்தியத்தை சேர்ந்திருக்கும், நித்தியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்கள், ஒரு நாளிலே அல்லது வேறொரு நாளிலே நீங்கள் தேவனை சந்திக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா என்று நான் அதிசயிக்கிறேன். நீங்கள் அந்த நினைவிழப்பு வியாதியின் சிறுமூச்சு அளவு உங்களுக்கு இருந்தால், நீங்கள்... நீங்கள் தவறானவற்றில் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு, நீங்கள் அலைந்து திரிந்து, இன்றிரவு, நீங்கள் இயேசு கிறிஸ்துவில் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போனால்? நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்தி “சகோதரன் பிரான்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள், நான் ஒரு உண்மையான கிறிஸ்தவனாகவும், உண்மையான விசுவாசியாகவும் அடையாளம் கண்டு கொள்ளப்பட விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, உன்னை ஆசீர்வதிப்பாராக! ஓ, ஆமாம், சுற்றிலும் எங்கும் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக, சகோதரனே, அது சத்தியம் என்று நான் உண்மையாக விசுவாசிக்கிறேன். கிறிஸ்தவர்கள் என்ற முறையில் அநேக வருடங் களுக்கு முன்பாக இருந்த கிறிஸ்தவர்களைப் போல நாம் இல்லை, “நான் விசுவாசிக்கிறேன்,'' என்று மாடி முகப்பில் (balcony) உள்ள யாரோ ஒருவர், கூறுகிறார். 62பெந்தேபிெகாஸ்தே மக்களே, உங்கள் தாய் தந்தையர்கள் அங்கே வெளியில் தெருக்களில் நின்று, பழைய தம்புருவை (tambourine) அடித்துக் கொண்டிருந்தனர். உங்களைக் குறித்து என்ன. உங்கள் தாய், சிறிய குழந்தைகளாகிய உங்களிடம் அயராது பாடுபட்டு, களைத்துப் போயிருப்பார்கள். உங்களுக்கு சில சமயங்களில், துணிகளோ, மற்ற எல்லாக் காரியங்களோ இல்லாமற் போயிருக்கும். ஆனால் உங்கள் தாயும் தந்தையும் குறிக்கோளிற்கு உண்மையாய் இருந்தார்கள், கிறிஸ்துவை உயர்த்திப் பிடிக்க பெந்தேகொஸ்தே மக்களாகிய நீங்கள் 50 வருடங்களுக்கு முன் (1964 - முன் - தமிழாக்கியோன்) என்ன செய்தீர்கள், நீங்கள் ஸ்தாபனத்தை விட்டு வெளியே வந்தீர்கள். அவிசுவாசிகளிடமிருந்து உங்களை வேறுபிரித்துக் கொண்டீர்கள், அதுதான் உங்களை பெந்தேகொஸ்தேயினராக ஆக்கினது. ஆனால் “பன்றி சேற்றிலே புரள திரும்பினது போன்றும், நாய் தான் கக்கினதைத் தின்ன சென்றது போலவும்” நீங்கள் எந்த குழப்பத்தியிலிருந்து வெளியே வந்தீர்களோ சரியாக அதற்குள்ளே திரும்பிச்சென்று அதே காரியத்தை செய்தீர்கள். காரணம் என்ன? ஆவிக்குரிய நினைவிழப்பு வியாதி மக்களிடம் பரவிவிட்டது. நீங்கள் உங்களுடைய பிராமணங்களையும், உங்கள் ஸ்தாபன குறிப்புகளையும் கொண்டுள்ளீர்கள். இப்பொழுது சரியாக மற்றவர்களுடன் சேர்ந்துள்ளீர்கள், மற்றவர்களுடன் இருக்க விரும்புகிறீர்கள். உங்கள் ஸ்திரீகள் தங்கள் முடிகளை வெட்டிக் கொள்ளவும், வர்ணம் பூசிக்கொள்ளவும் மற்றக் காரியங்களையும் செய்யவும் நீங்கள் அனுமதித்து விட்டீர்கள். சபைகளில் இத்தகைய காரியங்கள் செய்யப்படவும் அனுமதித்து விட்டீர்கள். அது என்ன? ஆவிக்குரிய நினைவிழப்பு, 63பிறகு, முதலாவது நீ இதை அறிய வேண்டும். தேவன் மக்களிடையே வர ஆரம்பிக்கையில், அதன் பின் என்ன நேரிடுகிறது? உன்னால் அதை வரவேற்க முடியாமல் போகின்றது. பாருங்கள், நீ அந்த நினைவிழப்பு வியாதியினால், நீ கேள்விப்பட்ட அந்த ஒன்றினால், மிகவுமாக பாதிக்கப்பட்டிருக்கின்றாய். பார், நீ சில நிமிடங்கள் அந்த பிரமாணங்களிலிருந்து விலகி வேதத்தை எடுத்து, ஒரு கிறிஸ்தவன் எப்படி அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டும் என்பதை நீ பார்க்கத் தான் வேண்டும் என்று நீ நினைப்பதில்லையா? ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்'' அப்போஸ்தலரில் பேதுரு “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்று கூறுகிறான். அது அப்படியல்ல என்று அவர்கள் உன்னிடம் கூறுவார்களானால், அப்படியென்றால், உன்னுடைய போதகருக்கு, ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. அவன் தன்னைத் தானே அந்த சபையுடன் அடையாளம் கண்டு கொள்ளப்பட முடியாது. ஸ்தாபனம் அல்ல; ஒரு சபை, கிறிஸ்துவின் காணக்கூடாத சரீரம். 64இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார். அவர் என்ன செய்வேன் என்று வாக்குரைத்தாரோ சரியாக அதைச் செய்ய இங்குள்ளார்கள். இப்பொழுது சிறிது நேரம் உங்களது தலைகளை வணங்கி ஜெபித்துக் கொண்டிருங்கள். பரிசுத்த ஆவியானவர் தாமே பேச இடம் கொடுங்கள். இதைப் பார். இந்த நாளுக்கான வாக்குத்தத்தம் என்னவென்பதை யாராவது ஒருவர் அறிவாரா, இப்பொழுது தேவைகள் உள்ள உங்களுக்கு, இன்றிரவு... உங்களில் அநேகர் கரங்களை உயர்த்தியுள்ளனர். நீ அதைச் செய்வதற்கு முன்னால்... நாம் இங்கே இருந்து வியாதியஸ்தருக்காக உண்மையாக ஜெபிக்கையில், நீங்கள் இக்காரியங்களெல்லாம் அப்படி அல்ல என்று கூறும் அந்த அவிசுவாசத்தினின்றும், ஸ்தாபனம், பிரமாணங்களிலிருந்தும், இது பிசாசினால் உண்டானது என்று கூறுகின்றதிலிருந்தும் உங்களால் வெளிவர முடியுமா என்று நான் வியக்கிறேன். அவர்கள் அப்படிச் சொல்வார்களானால், “இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடையாது'' இது தான் உண்மையென்றால் இது என்னவாயிருக்கும்? சற்று யோசி, அது அப்படியென்றால் இப்பொழுது நீ எங்கிருக்கிறாய்? பாருங்கள், நீ அதை வெளியே பேச வேண்டியதில்லை, உன் இருதயத்தில் மாத்திரம் அதை விசுவாசி. இங்கே அதை விசுவாசிக்கிற மக்கள் உள்ளனர். நான் இங்கே கடந்த இரண்டு இரவுகளாக உட்கார்ந்து ஏதோ ஒன்றுக்காக நான் பாடுபட்டு என் நாவை அடக்கிக் கொண்டிருக்கிறேன், அதை வெளியே அழைப்பதற்காக. நண்பர்களே, இதை நினைவில் கொள்ளுங்கள். அது தேவனுக்கும் உனக்கும் உள்ள ஒன்று. அது தவறாக உள்ளது என்று நீ அதை நினைத்துக் கொண்டிருந்தால்? என்ன நடக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ அதற்காக மன்னிக்கப்பட மாட்டாய். ஆவிக்குரிய நினைவிழப்பு, நீ சரியாக உன்னுடைய நித்திய மரணத்திற்கு, அவிசுவாசத்திற்கு, சென்று விடுவாய். “விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.'' 65இப்பொழுது உன்னுடைய வியாதிக்காக ஜெபித்து, கூறு ''கர்த்தராகிய இயேசுவே, நீர் வாக்குரைத்தீர், நான்...“ என்று சொல். முன்பு எப்போதும் வந்திராத சில அந்நியர்கள் இங்கிருக்கலாம். “லோத்தின் நாட்களில் நடந்தது போல, தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டது போல'' என்று இயேசு வாக்குரைத்த வேத வசனத்தை நான் எடுக்கிறேன். அங்கு தெரிந்து கொள்ளப்பட்டதும், வெளியே அழைக்கப்பட்டதுமான ஆபிரகாமின் குழு, ஜனங்கள் இருந்தனர். ஆபிராமிலிருந்து ஆபிரகாம் என்று அவன் பெயர் மாற்றப்பட்ட பின்தான் ஆபிரகாம் வார்த்தை மாம்சமானதைக் கண்டான். அது சாராளின் இருதயத்தின் நினைவுகளைப் பகுத்தறிந்தது. ஆபிரகாமின் ராஜரீக வித்து வந்து, அதைச் செய்த போது அவரை “ஒரு பிசாசு” என்றனர். அவர் பரிசுத்த ஆவியானவர் வரும்போது, அவரும் அதே காரியத்தைத்தான் செய்வார். என்னை அப்படி அழைத்தீர்களானாலும் உங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் பரிசுத்த ஆவியான வருக்கு விரோதமாக நீங்கள் பேசினீர்களானால் உங்களுக்கு மன்னிப்பே கிடையாது'' என்றார். 66இப்பொழுது அவர் தாமே, தம்முடைய வல்லமையால் இந்த மக்கள் கூட்டத்தினுள் வந்து, நீ எங்கே இருந்தாலும், தம்முடைய ஆவிக்குரிய பகுத்தறிதல் மூலம் அவர் தான் வார்த்தை என்பதைக் காண்பிக்கிறார். ஆகவே இங்கு யாராவது ஆவிக்குரிய நினைவிழப்பு வியாதியினால் அவதியுற்றால், அவர்களுக்கு... சாக்குபோக்கு இருக்காது என்று இந்த பீட அழைப்பு செய்யப்படுவதற்கு முன்பாக நான் கூறுகிறேன். கர்த்தராகிய தேவன் தாமே உதவி செய்வாராக. இப்பொழுது உங்கள் தலைகளைத் தாழ்த்தி, பயபக்தியுடன் ஜெபிக்கையில்... பாருங்கள், அங்கு ஒரு ஸ்திரீ எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறாள். அவள் தன் கரங்களை முகத்தில் வைத்துள்ளாள். அவள் முதுகு தண்டு பிரச்சனையினால் அவதியுறுகிறாள். அவளுக்கு நரம்புத் தளர்ச்சியும், வயிற்றுக் கோளாறும் உள்ளது. அவள் இப்பொழுது எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறாள். அவள் இந்த தேசத்தைச் சேர்ந்தவள் அல்ல என்று அவளுக்குத் தெரியலாம். அவள் மாகன் (macon) என்னும் பட்டினத்திலிருந்து வருகிறாள். ஆம் நீர் யார் என்று தேவன் எனக்கு கூறுவாரென்று விசுவாசிக்கிறீரா? நீர் திருமதி அயர்ஸ். அது சரியென்றால் உன் கரங்களை உயர்த்து. நான் உனக்கு அந்நியன். அது உண்மை, இல்லையா? இப்பொழுது உன்னுடைய பிரச்சனையெல்லாம் முடிவுற்றது. இயேசு கிறிஸ்து; நீ அவருடைய வஸ்திரத்தை தொட்டாய் அவர் உன்னை முழுமையாக ஆக்கினார். இப்பொழுது மாத்திரம் நீ அதை விசுவாசி. 67கட்டிடத்தின் பின்னே ஒரு மனிதன் அமர்ந்திருக்கிறார் அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் கேட்கிறார். ஆவியின் அபிஷேகம் தேவை என்கிறார். அவர் இங்கே எனக்கு முன்பாக நிற்கிறார். அவர் இங்கிருப்பவர் அல்ல. அவர் கரோலினா, சார்லேட்டை (Carolina, charlotte) சேர்ந்தவர். அவருடைய பெயர் லீபோ. முழு இருதயத்தோடும் விசுவாசி. என் சகோதரனே, நீ விசுவாசிப்பாயானால், தேவன் பரிசுத்த ஆவியினால் உன்னை நிரப்புவார். 68இங்கே எனக்கு நேராக, வலது புறத்தில் எனக்கு முன்பாக ஒரு மனிதனும் அவருடைய மனைவியும் உட்கார்ந்துள்ளனர். அவர்கள் வயதான தம்பதிகள். அந்த ஸ்திரீ பெருங்குடல் பிரச்சனையால் (Colon) அவதியுறுகிறாள். அவளுடைய கணவனுக்கு இருதய கோளாறு உள்ளது. அவர்கள் இந்த இடத்தைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் டென்னஸியிலிருந்து (Tennessee) வருகின்றனர். திரு. திருமதி. தாமஸ், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், உங்கள் கைகளை உயர்த்தி உங்கள் சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். அவர் சரியாக அதைத்தான் செய்வதாக வாக்குரைத்திருக்கிறார். இம்மக்களை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. ஆவிக்குரிய நினைவிழப்பு! இயேசு “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனென்றால் நான் (personal pronoun) (தனிப் பெயர்ச் சொல் ''நான்'' ”I“) உலகமுடிவு பரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்'' ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்'' என்றார். 69இப்பொழுது, இங்கிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, நீங்கள் காணக்கூடாத ஏதோ ஒரு தவறு உங்களிடம் இருக்கலாம். நீங்கள் விசுவாசிக்க விரும்புகிறீர்கள், ஆனால் உங்களால் அதற்குள் செல்ல முடியவில்லை. ஆதலால் நீங்கள் ஜெபிக்கப்படவும் அவருடைய பிரசன்னத்தில் நீங்கள் இருக்கையில் அவரை ஏற்றுக் கொள்ளவும் விரும்புவீர்களானால் நீங்கள் வந்து இங்கே வலதுபுறத்தில் என் பக்கத்தில் நில்லுங்கள். நான் உங்கள் மேல் கைகளை வைத்து ஜெபிக்க ஆவன செய்யுங்கள். நீங்கள் ஆவிக்குரிய நினைவிழப்பு வியாதியினால் அவதியுறுகையில், ஜெபிக்கப்பட இப்பொழுது நேராக இங்கு வருவீர்களானால் அதிலிருந்து (நினைவிழப்பு வியாதியிலிருந்து -தமிழாக்கியோன்) நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். நீங்கள் ஒரு விசுவாசியாக இல்லாமல், ஆனால் ஜெபிக்கப்பட விரும்புவீர்களானால் இங்கே மேலே வந்து நில்லுங்கள். வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது வருகிறார்களா? ஸ்திரீயே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வாலிப ஸ்திரீயே தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராவது? வாருங்கள், இங்கே இப்பொழுது நில்லுங்கள். ஆவிக்குரிய நினைவிழப்பு. அதனால் நான் பாதிக்கப்பட விரும்பவில்லை. தேவன் என்னை திருப்புவாராக. ஏதாவது ஒரு மரணத்தை நான் அடையட்டும், ஆனால் ஒரு அவிசுவாசியாக மரிக்கின்ற அந்த மரணம் நான் ஒருபோதும் அடையாமல் இருப்பேனாக. வா, அவரை இப்பொழுது ஏற்றுக்கொள். நீ அதைச் செய்வாயா? மாடி முகப்பிலிருந்து (balcony) இங்கே கீழே இறங்கி வாருங்கள், நண்பர்களே. இங்கே கீழே சில படிகள்தான் உள்ளன. அது உங்களுக்கு மரணத்திற்கும், ஜீவனுக்கும் உள்ள வித்தியாசத்தை குறிக்கலாம். கவனி, கிறிஸ்துவை எதுவும் செய்யாமல் இருக்க வைக்க என்னால் முடியாது. கிறிஸ்துவிற்கு ஒரு காரியத்தை தவிர வேறு எதுவும் செய்யத் தேவை இல்லை. அவர் தமது வார்த்தையைத் தான் காத்துக் கொள்ள வேண்டும். அவர் கிறிஸ்துவாய், தேவனாய் இருக்கவேண்டுமென்றால் அதை அவர் செய்துதான் ஆகவேண்டும். அவர் தமது வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், உங்கள் அனுபவத்தைக் குறித்து நிச்சயமில்லாமல் இருப்பீர்களானால், ஏன் நீங்கள் இங்கே வரக்கூடாது. நீ ஒரு ஸ்தாபனத்தை சார்ந்திருந்தால், நீ ஒரு பெந்தேகொஸ்தே பேரப் பிள்ளையாக இருந்தால்... தேவனுக்கு பேரப் பிள்ளைகள் கிடையாது. அவருக்கு குமாரரும் குமாரத்திகளும் தான் உண்டு. ஆனால் பேரப் பிள்ளைகள் கிடையாது. பாருங்கள்? தேவன் அதை கொண்டிருப்பதில்லை. அவருக்கு குமாரரும் குமாரத்திகளும் தான் உள்ளனர். நீ அப்படியில்லை என்று உனக்குத் தெரியும். ஒரு வேளை நீ அந்நிய பாஷைகளில் பேசியிருக்கலாம், நீ நடனமாடி இருக்கலாம். இந்த எல்லாவற்றையும் நீ செய்திருக்கலாம். அதெல்லாம் சரிதான். அதற்கெதிராக என்னிடம் ஒன்றும் கிடையாது. ஆனால் இன்னுமாய் உனக்கு ஆவிக்குரிய நினைவிழப்பு வியாதி இருக்குமானால், இங்கே வா, வந்து இங்கே நில்லு. அதைக் குறித்து நாம் ஜெபிப்போம். என்ன சொல்லுகிறாய்? சபை அங்கத்தினனே, ஒரு சாதாரண சபை உறுப்பினரே, நீ ஏன் இங்கு வந்து இப்பொழுது அதை (ஆவிக்குரிய நினைவிழப்பு வியாதி - தமிழாக்கியோன்) விரட்டியடிக்க கூடாது. 70பர்மிங்ஹாமை இங்கே விட நான் விரும்பவில்லை. நியாயந்தீர்ப்பு நாள் வரும்போது நான் உங்களுக்கு முன்பாக நிற்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும்... ஞாபகங் கொள்ளுங்கள். நான் உங்களை மறுபடியும் சந்திப்பேன். நான் உங்களை இங்கே சந்திக்கவில்லையெனில், நான் உங்களை நியாயந்தீர்ப்பில் சந்தித்து, இன்றிரவு நான் கூறினதற்கு பதில் சொல்ல வேண்டும். இப்பொழுது கேளுங்கள். நண்பர்களே, மனந்திரும்புங்கள்! அதை விட்டு வெளியே வாருங்கள். அதைவிட்டு வெளியேறுங்கள். இப்பொழுது வாருங்கள். இந்நாட்டில், அல்லது இந்த இடத்தில் உள்ள எல்லா மயிர் கத்தரிக்கப்பட்ட (குட்டை மயிர் bobbed hairs) பெண்களையும் அது இப்பொழுது இங்கே வரச் செய்ய வேண்டும். அது முற்றிலும் சரி, “என் முடி நீளமாக வளரச் செய்ய விரும்புகிறேன் சகோ. பிரான்ஹாமே” அது செய்ய... நான் செய்ய... நல்லது, “அதைச் செய்ய என்னிடம் கிருபை இல்லை '' அதனுடன் செய்ய ஏதாவது இருக்கிறதா?'' என்று ஏன் நீ கூறுகிறாய்? 71இங்கே சில காலத்திற்கு முன்னால், ஒரு உண்மையான மகத்தான ஊழியக்காரர் என்னிடம் வந்து ''சகோ. பிரான்ஹாம் நான் உம் மீது கைகளை வைக்க நான் விரும்புகிறேன், எல்லோரும் உம்மை ஒரு தீர்க்கதரிசியாக கருதுகிறார்கள்'' என்று கூறினார். நான் கூறினேன் ''நான் ஒரு தீர்க்கதரிசி என்று ஒரு போதும் கூறினதில்லை'' என்று. அவர் கூறினார். ஆனால் மக்கள் உம்மை அவ்வாறு கருதுகின்றனர், நீர் எப்பொழுதும் ஸ்திரீகளை, அவர்களுடைய குட்டைக் கால் சட்டைகளை, கத்தரிக்கப்பட்ட குட்டை மயிரை, மற்றதைக் கிழித்தெறிந்து கொண்டிருக்கிறீர்கள். அது உங்கள் வேலை அல்ல'' நான் கூறினேன் “அப்படியெனில் அது யாருடைய வேலை?'' அவர் கூறினார் “நீர் ஏன் அம்மக்களுக்கு, பெண்களுக்கு மகத்தான ஆவிக்குரிய வரங்களைப் பெறுவது எப்படி என்று போதித்து அவர்களுக்கு உதவக்கூடாது. அதை விட்டுவிட்டு... உம்மை அவர்கள் மதிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன கூறினாலும், உம்மை விசுவாசிப்பார்கள். நீ ஏன் அவர்களுக்கு மகத்தான வரங்களை பெறுவது எப்படி என்று கூறி அவர்களுக்கு உதவாமல், அதற்கு மாறாக எப்பொழுதும் அவர்களை கடிந்து கொள்கிறீர்கள்'' நான் கூறினேன், “அவர்கள் ஏ.பி.சி (A.B.C.) க்களை கற்றுக் கொள்ள முடியாதிருக்கையில் எப்படி அவர்களுக்கு அல்ஜீப்ரா (Algebra) கணக்கை சொல்லிக் கொடுக்கமுடியும்?'' பாருங்கள்? பாருங்கள்? 72நீங்கள் கீழேயிருந்து துவக்க வேண்டும், மனந்திரும்பு அல்லது அழிந்து போ! இப்பொழுது உன்னை ஒத்துப் பார்க்க முடியவில்லையெனில் மனந்திரும்பு அல்லது அழிந்து போ! ஒவ்வொரு இரவும் இயேசு கிறிஸ்து தம்மை முழுவதுமாக இங்கு அடையாளம் கண்டு கொள்கிறார். இந்த இரவுதான் இந்த இரட்சிப்புக்கு நாம் திரும்ப இயலும். இங்கு மேலே வர சில அடிகள் மாத்திரம் உள்ளன. நான் காத்திருக்க எனக்கு நிறைய நேரம் உள்ளது. பர்மிங்ஹாம், ஞாபகங்கொள். உன் இரத்தம் என் மீது இல்லை. நான் குற்றமற்றவன், பழியற்றவன். நீ உண்மையாக பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தால், இப்பொழுது நீ வர உனக்கு ஒரு தருணம் கிடைத்திருக்கிறது. ஏதோ ஒரு சபை, கொள்கையால் நீ அவதியுற்று அதன் காரணமாக உனக்கு ஆவிக்குரிய நினைவிழப்பின் வியாதி வந்திருந்ததால், நீ ஏன் வரக்கூடாது? இயேசுதான் அந்த சுகம். நீ வரமாட்டாயா? மாடி முகப்பை (balcony) விட்டு வந்த மக்களே. அவர்கள் வெளியில் செல்கிறார்களா அல்லது பீடத்திற்கு வருகிறார்களா என்று பார்க்க நான் காத்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்துள்ளவர்களே, இதைச் சுற்றி வாருங்கள். அது சரி. இங்கு வந்து பீடத்தை சுற்றி ''இதனுடன் நான் முடிவு பெற்றுவிட்டேன்“ என்று கூறுங்கள். ஆம். இரண்டு ஸ்திரீகள் இங்கே வருகிறார்கள். அது நல்லது. சரியாக இப்பொழுது மேலே வாருங்கள். அதிலிருந்து சில அடிகள்தான். அந்த அடிகள்தான் வித்தியாசத்தைக் குறிக்கிறது. குறிக்கலாம். 73இப்பொழுது கவனியுங்கள், நான் உங்களிடம் ஒன்றைக் கேட்கப் போகிறேன். அவர் இன்றிரவு வருவாரானால் எப்படி இருக்கும்? ''ஓ, அவர் வரவில்லை '' என்று கூறுகிறாய். அவர் (இன்றிரவு - தமிழாக்கியோன்) வரப்போகிறாரோ, இல்லையோ, ஞாபங்கொள். கர்த்தர் உரைக்கிறதாவது! இதுதான் அந்த கடைசி அடையாளம், உண்மையை அல்லாமல் வேறெதாவது நான் கூறினதாக நீ எப்போதாவது கேட்டிருக்கிறாயா? நீங்கள் உங்கள் கடைசி அடையாளத்தைக் காண்கிறீர்கள். அது வேதபூர்வமானது. பெந்தேகொஸ்தே, உன்னுடைய கடைசி அடையாளத்தை நீ காண்கிறாய். எடுக்கப்படுதலுக்கு பிறகு இஸ்ரவேலுக்கு அவர் அளித்த வாக்குத்தத்தத்தோடு உன்னை குழப்பிக் கொள்ளாதே. அது நீயல்ல. அப்பொழுது உனக்கு முடிந்து போயிருக்கும் பார்? இப்பொழுதுதான் உன்னுடைய நாள், உன்னுடைய அடையாளம். இப்பொழுதுதான் உன்னுடைய நேரம். அதைப் புறக்கணிக்காதே. அதைச் செய்யாதே. நீ வந்துவிடுவது நல்லது. நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா ஞாபகங்கொள். பர்மிங்ஹாம், அருமையான மக்களை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. என்னுடைய ஜீவியத்திலே நான் சந்திக்க விரும்பும் அருமையான மக்கள் நீங்கள். ஆனால் உங்களுக்கு எழுப்புதல் தேவையாயிருக்கிறது. நீங்கள்தான் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆவிக்குரிய நினைவிழப்பு வியாதியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மரிக்கிறீர்கள். அதைச் செய்யாதீர்கள். நீ பெற்று கொண்டதை எழுப்புதல் அடையச் செய்யுங்கள். இயேசு வருவதற்கு முன்னே துரிதமாக அதை மேலே கொண்டு வாருங்கள். 74அது சரி, அவர்கள்... வந்து கொண்டிருக்கும் வேளையிலே... கர்த்தர் அழைத்துக் கொண்டிருக்கிற எல்லோரையும் நாம் இங்கே பெற்றுக்கொள்ளும் வரை அவர்களை இங்கே வரவிடுவோம். இப்பொழுது வாருங்கள். அந்த நினைவிழப்பு வியாதியை விரட்டுங்கள். அந்த மகத்தான வைத்தியர் அதைச் சுகப்படுத்த, உம்மை விட்டு அதை அப்புறப்படுத்த இப்பொழுது இங்குள்ளார். அவர் இங்கிருக்கிறார் என்பதை நிரூபித்துள்ளார். எத்தனைப் பேர் உங்கள் கரங்களை உயர்த்தி அதை அடையாளம் கண்டு உண்மையாக “அதை விசுவாசிக்கிறேன்'' என்று கூறுவீர்கள். அவர் கூறியுள்ளார் நீ... பாருங்கள். இப்பொழுது அவர் இங்கிருக்கிறார். பாருங்கள்? பாருங்கள், நீ விசுவாசி. நீங்கள் மரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றும், எழுப்புதல் உங்களுக்கு தேவையாயிருக்கிறது என்றும்; நான் உண்மையைக் கூறுகிறேன் என்றும் எத்தனைப்பேர் அறிவீர்கள்? (சபையார் “ஆமென்'' என்கின்றனர்-ஆசி) பாருங்கள்? அது உண்மை. நீங்கள் அருமையான மக்கள். இங்கே உள்ள தெற்கத்தியர்களின் சட்டையினுள் உள்ள நல்ல இருதயத் துடிப்பை போல வேறு இருதயத்துடிப்பு இல்லை. அது சரி, உண்மையான மக்கள்! ஆனால் மக்களே நீங்கள் சீக்கிரமாய் விழித்துக் கொண்டால் நலமாயிருக்கும். (சகோ. பிரான்ஹாம் மூன்று முறை பீடத்தை அடிக்கிறார்) நீ நினையாத நேரத்தில் அது நடக்கலாம். அல்லது நடக்காமல் போகலாம்; எனக்குத் தெரியாது. 75ஆகையால் நீ உன்னுடைய கடைசி எச்சரிப்பை பெற்றுக் கொள்கிறாய் என்பதை ஞாபகம் கொள். நீ தப்பித்துக் கொள்ள நேரம் இருக்கும் பொழுதே, தப்பித்துக் கொள். இப்பொழுதே வா. அவர்கள் வந்து கொண்டிருக்கின்ற வரை நான் காத்துக் கொண்டிருக்கப் போகிறேன், ஏனென்றால் ஒருவேளை... ஒரு ஆத்துமா பத்தாயிரம் உலகங்கள் மதிப்புடையது. மக்கள் உறுதி கொள்கிற வரையில் நீங்கள் உங்கள் வேறுபாடுகளை உடைத்தெரிந்து, தன்னல குணத்தையெல்லாம் வெளியே எடுத்துபரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வீர்களானால் இந்த காரியம் ஒரு பெரிய எழுப்புதலை அடைந்து இங்கு சுற்றி இருக்கும் எல்லா சபைகளை தொடும். நான் இதையே காண விரும்புகிறேன்; அதை விசுவாசிப்பதாகவும், விசுவாசிக்கப் போவதாகவும் நீங்கள் உரிமை கோருகிறீர்கள். ஆனால் அது தன்னை அடையாளம் காண்பிக்க வரும்போது, நீங்கள் ஒருவரையொருவர் வேறு பிரித்து இழுத்துக் கொள்கிறீர்கள். நாம் ஏன் நம்முடைய இருதயங்களை தேவனுடைய வார்த்தையில் இணைத்து சத்தியத்தை விசுவாசிக்கக் கூடாது? அது தான். நீங்கள் மரித்துக் கொண்டே சரியாக லவோதிக்கேயாவினுள் சென்று கொண்டிருக்கிறீர்கள். அவர் என்ன வாக்குரைத்தாரோ சரியாக அதுதான் அந்த வழியாயிருக்கும். நீ இப்போது வரமாட்டாயா? இப்பொழுதுதான் அந்த நாள், ஏற்கப்பட்ட நேரம். பரிசுத்த ஆவியானவர் என்ன செய்யப் போகிறார் என்பதை கவனியுங்கள். 76இப்பொழுது இங்குள்ள எல்லா ஊழியக்காரர்களும், இம்மக்களுக்காக ஆர்வம் கொண்டுள்ளவர்கள், வந்து என்னுடன் ஜெபியுங்கள். இம்மக்களுக்காக ஆர்வம் கொண்டுள்ள எல்லா ஊழியக்காரர்களும் இங்கே வாருங்கள். ஊழியக்காரர் அல்லது ஒரு நல்ல தனிப்பட்ட ஊழியர், இந்த ஸ்திரீகள் மத்தியில் நிற்க ஒரு பெண். அனைவரும் சரியாக இங்கே சுற்றி வந்து இம்மக்களின் மத்தியில் வாருங்கள். இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்த இடத்தில் வந்து இம்மக்களின் மத்தியில் தம்மை அடையாளம் கண்டு கொள்ள போகிறார் என்று என் முழு இருதயத்துடன் நான் விசுவாசிக்கப் போகிறேன். 77முதலாவதாக இப்பொழுது இங்குள்ள மக்களுக்கு நான் சில அறிவுறுத்தலைக் கூறட்டும். நண்பர்களே, நீங்கள் எதற்காக இங்கிருக்கிறீர்களோ அதை அவர் அறிவார். அதை உனக்கு என்னால் நிரூபிக்க முடியும்! நான் இங்கே மேடையின் மேலே ஒவ்வொருவராக நிறுத்தினால் அவர் உங்களுக்கு தெரியப்படுத்தாத காரியம் ஒன்றும் இருக்காது. என் சிறு வயது முதற்கொண்டே அது இருந்து வருகிறது. இப்பொழுதிற்கான கேள்வி அந்த வரமல்ல. கேள்வியானது அதை நீ பெற்றுக் கொள்வாயா? அதை நீ விசுவாசிக்கிறாயா என்பது தான். இப்பொழுது அவர் இங்கே இருக்கிறார். நல்லது, இப்பொழுது அவர் இங்கிருப்பாரானால், அதன்பின் அவர் தமது வார்த்தையை காத்துக் கொள்வார் ஒரு காரியம் தான் உள்ளது. நீ அதை பெற்றுக் கொண்டாய், என்று விசுவாசித்து ஏற்றுக் கொள், எழுந்து நின்று தேவனாகிய கர்த்தாவே, “இதை ஏற்றுக் கொள்ள இங்கிருக்கிறேன்'' என்று கூறு. அது நடைபெறுகிற வரையிலும் அங்கேயே தரித்திரு. பட்டி ராபின்சன் (Buddy Robinson) ஒரு நாள் சோள வயற்காட்டில் நின்று கூறினது போல. ''ஆண்டவரே நீர் பரிசுத்த ஆவியை எனக்கு தரவில்லையெனில் நீர் திரும்ப வரும்போது இங்கே ஒரு எலும்புக் குவியலைக் காண்பீர்'' என்று கூறினார். அவர் முழு மெய் உறுதிப்பாடு (earnest) கொண்டவர். நீ பதறல் கொள்கின்ற வரையிலும் நீ தேவனிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ளப் போவதில்லை. 78இப்பொழுது இன்றைய விளைச்சலை நீ கவனித்தாயா? நாம் என்ன செய்கிறோம் என்பதை கவனித்தாயா? நாம் மேடையின் மேல் வருகின்ற வரையில், நாம் சரியாக தேவனைக் குறித்து போதுமானது நம்மிடம் இருப்பதாக நினைத்து வந்து ''ஆம் நான் மேலே வருவது நல்லதாயிருக்கும்'' என்று கூறுகிறோம். இப்பொழுது உலகமெங்கும் உள்ள அனுபவம் இதுதான் “ஆம், நான் மேலே ஏறிச் சென்று நிற்பது நல்லது'' ''நல்லது எனக்குத் தெரியாது, இங்கே நானிருக்கிறேன், பார்'' என்று கூறுகிறது. ஹீம்! இருப்பது எந்த இடத்தில்! அங்கே அக்கினி எரியவில்லை. அங்கே உற்சாகம் இல்லை. ”உள்ளே செல்ல“ அங்கே ஒன்றுமில்லை. ஒரு ஊழியக்காரன் என்று முறையில் தேவனுடைய மக்கள் அந்நிலையிலிருப்பதை என்னைக் கொல்லுகிறது. நாம் எரியூட்டப்பட்டவர்களாக (on fire) இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் பாருங்கள், அதுதான்? சரியாக நான் உங்களிடம் கூறினது, ''நீ வெதுவெதுப்பாய் இருக்கிறாய்“ வெளிப் படுத்தல் 3-ல் ''நீ அனலுமின்றி குளிருமின்றி இருப்பதால் உன்னை நான் என் வாயினின்று வாந்தி பண்ணிப்போடுவேன்'' அது சரி. (சபையோர் ”ஆமென்“ என்கின்றனர் -ஆசி) அதைத்தான் அவர் கூறினார். அதைத்தான் அவர் செய்யப் போவதாகக் கூறியிருக்கின்றதால். இந்த திரள் கூட்டம் அதுவாக இருக்கக்கூடாது. நீ தேவையுள்ளவனாய் இங்கிருக்கிறாய். அதை பெற்றுக் கொள்வோம் அல்லது சரியாக இங்கேயே மரித்துப் போவோம். அது சரி. நாம் அதைப் பெற்றுக் கொள்வோம் அல்லது மரிப்போம். 79இப்பொழுது, என்னுடைய அருமையான சகோதர சகோதரிகளே, நான் கீழே வந்து நீங்கள் ஏதாவது செய்ய நான் உதவக் கூடுமானால், நிச்சயமாக அதைச் செய்வேன். இப்பொழுது, வரத்தின் மூலம், நீங்கள் எதற்காக இங்கிருக்கிறீர்கள் என்று என்னால் கூற முடியும். பரிசுத்த ஆவியின் மூலமும், தேவ ஆவியின் மூலமும் நீ எதற்காக வந்திருக்கிறாய் என்றும், என்ன செய்திருக்கிறாய் என்றும், வருங்காலத்தில் எப்படியிருக்கும் அல்லது அதைப் போன்ற வேறெதையும் என்னால் கூற இயலும், ஆனால் அதை பொருட்படுத்தாதே. நீ நீயாகவே அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது நீயாக இருக்கவேண்டும். இப்பொழுது தயாராயிருக்கிறாயா? உன்னுடைய கரங்களை உயர்த்தி நான் தயாராயிருக்கிறேன், இங்கேயே மரிக்க தயாராயிருக்கிறேன் என்று கூறு ''நான் இங்கே மரிக்க தயாராயிருக்கிறேன் அல்லது தேவனிடத்திலிருந்து எனக்கு என்ன வேண்டுமோ அதைப் பெற்றுக் கொள்வேன்'' என்று நீ அர்த்தங்கொள்கிற வரையிலும் அப்படிக் கூறாதே. ஆமென். நீங்கள் உண்மையாகவே தயாராயிருக்கிறீர்களா? (சபையோர் களிகூர்ந்து “ஆமென்'' என்கின்றனர் - ஆசி). 80எல்லா இடத்திலும் இருக்கும் கூட்டத்தார் எல்லோரும் எழுந்திருக்கட்டும். நாம் நம்மை ஒன்றாக இணைத்துக் கொள்வோம். நாம் ஜெபம் செய்வோம். இப்பொழுது... ஊழியக்காரர்களே, கிறிஸ்துவின் கரத்திற்கு பிரதிநிதியானவர்களே, ஒவ்வொருவரும் எழுந்து இம்மக்களிடத்திற்கு நடந்து வாருங்கள். பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறவர்களே, அனுபவத்தைப் பெற விரும்புகிறவர்களே, ஒரு உணர்ச்சிப்பூர்வமான அனுபவமல்ல; பரிசுத்த ஆவியாகிய ஜீவனை, உன்னில் ஜீவ அணுவை பெற விரும்புகிறாய்? உன்னைத் தானே அடையாளம் கண்டுகொள்ளவிடாமல் செய்யும் அந்த நினைவிழப்பு வியாதி விரட்டி அடிக்கப்பட விரும்புகிறாய். நீ எங்கு நிற்கிறாய் என்றும், எங்கு இருக்கிறாய் என்றும் உனக்குத் தெரியவில்லை. ஆகையால் அதை (நினைவிழப்பின் வியாதியை - தமிழாக்கியோன்) இப்பொழுது விரட்டி அடிப்போம்! இங்கே உண்மையான மறுபிறப்பு உனக்குள்ளது. இப்பொழுது இம்மக்களின் மீது நமது கரங்களை வைப்போம், ஒரு மனதோடு கைகளை உயர்த்தி நாம் ஜெபிப்போம். 81பரலோகப் பிதாவே, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே இதை அருளும். இந்த சனிக்கிழமை இரவில் பரிசுத்த ஆவியானவர் தாமே பலமாக வீசுகின்ற சுழல் காற்றைப் போல வரட்டும். இம்மக்கள் தாம் பரிசுத்த ஆவிக்குள் அபிஷேகம் பண்ணப்படட்டும். தேவ வல்லமையின் அக்கினி தாமே இவர்களை விட்டுவிடாதிருக்கட்டும். இக்காலையில் இங்கிருப்பார்களானால் பரிசுத்த ஆவியானவர் வரும்வரை அவர்கள் தரித்திருக்கட்டும். அது தான் யோசனை! அதுதான்! அங்கே அது இருக்கிறது. (சகோ. பிரான்ஹாம் பீடத்தை ஐந்து முறை அடிக்கிறார் - ஆசி) அதுதான் பரிசுத்த ஆவியின் வருகை (பீடத்தை விட்டு செல்லும் முன் சகோ. பிரான்ஹாம் யாரிடமோ ''நான் செய்தேன்'') நான் செய்தேன் என்று கூறுகிறார். அதுதான் விசுவாசி. இப்பொழுது அதை ஏற்றுக்கொள்! நிரப பப்படு... (சபையோர் ஆர்ப்பரித்து ஜெபிக்கின்றனர்).